யூரிக் அமில பிரச்சனை இருந்தா மட்டுமில்ல, இந்த சிக்கல் இருந்தாலும் பிஸ்தா வேண்டாம் ப்ளீஸ்!

Effects Of Pistachios: புரதச் சத்து அதிகம் நிறைந்திருக்கும் பிஸ்தா, மிகவும் நல்ல கொட்டை வகை என்றாலும், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். யாருக்கு எப்போது? தெரிந்துக் கொள்வோம்

1 /8

உலர் பழங்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலர் பிஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்கள். பிஸ்தா பல பொருட்களை தயாரிக்கவும் பயன்படுகிறது. ஆனால் நீங்கள் அதை அதிகமாக உட்கொண்டால் அது உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்   

2 /8

பிஸ்தாவில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.  

3 /8

பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்களுக்கு தெளிவான பார்வையை தரும். ஆனால், சிலர் பிஸ்தாவை சாப்பிட்டால் அவர்களுக்கு எதிர்மறையான விளைவு ஏற்படும்

4 /8

எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பிஸ்தா ஒத்து வராது. அதிக புரதச் சத்து கொண்ட பிஸ்தா, உடல் எடையை சட்டென்று அதிகரித்துவிடும்

5 /8

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் பிஸ்தாவை உண்டால், இதயப் பிரச்சனைகளை அதிகரித்துவிடும்.  

6 /8

செரிமான பிரச்சனை உள்ளவர்களும் பிஸ்தாவை தவிர்க்க வேண்டும். இதை அதிகமாக உட்கொண்டால், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.  

7 /8

இது சிறுநீரக கற்கள் பிரச்சனையையும் வெகுவாக அதிகரிக்கிறது. எனவே, சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பவர்கள் தவறுதலாக கூட பிஸ்தாவை தவறாமல் உட்கொள்ளக்கூடாது.

8 /8

பிஸ்தாவை அதிகமாக உட்கொண்டால் உடலில் அரிப்பு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் தோன்றும்.