சனி குரு உச்சம்.. 2024ல் கோடீஸ்வர யோகம் பெற போகும் ராசிகள் எவை

Yearly Rashifal 2024: 2024 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ஏனெனில் புதிய ஆண்டில் குருவும் சனியும் சேர்ந்து சில ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் செல்வத்தையும் தருப் போகின்றனர்.

இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டில், குரு பெயர்ச்சி அடைந்து ரிஷப ராசிக்குள் நுழைகிறது. சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி கதியில் இருப்பார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயமும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

1 /6

குரு சனி சேர்க்கை: 2024 ஆம் ஆண்டில், குரு மற்றும் சனி இணைந்து 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். சனி மற்றும் குரு ஆசி பெற்ற இவர்கள் தொழில், வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் அடைவார்கள். மேலும் நிலுவையில் உள்ள பணிகளும் முடிக்கப்படும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும். இவர்களுக்கு வரும் 2024ம் ஆண்டு அதிர்ஷ்டம் கண்விழிக்கும் என்று கூறலாம்.

2 /6

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேஷ ராசியில் இருந்து குரு வெளியேறுவது இந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம்.

3 /6

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு அபரிமிதமான செல்வத்தைக் கொண்டு வரும். இவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன், உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

4 /6

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். சனியும், குருவும் இணைந்து இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரும் வெற்றியைத் தரும். தன்னம்பிக்கையும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.

5 /6

கும்பம்: 2024 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அருள் பொழிவார். சில முக்கியமான வேலைகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். தொழிலுக்கு நல்ல நேரம்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.