தினமும் இந்த 5 விஷயங்களை கடைபிடியுங்க - புத்தி கூர்மையாகும்... இளமையாவே இருப்பீங்க!

உங்களின் அன்றாட வாழ்வில் இந்த 5 விஷயங்களை தவறாமல் பின்பற்றினால் நீங்கள் நீண்ட நாள்களுக்கு இளமை பொலிவுடனும், புத்திக் கூர்மையுடனும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம். 

சில பழக்கவழக்கங்களை அன்றாடம் மேற்கொள்வதே நன்மை பயக்கும். ஒரு நாள் கூட தவறவிடக்கூடாது.

1 /8

நம் வாழ்வில் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம், ஆனால் ஒவ்வொரு நாளும் நமக்கு வயதாகிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், உங்களின் வாழ்வில் சில விஷயங்களை கடைபிடித்தால் எத்தனை வயதானாலும் அதே இளமை துடிப்புடனும், பொலிவுடனும் இருப்பீர்கள்.   

2 /8

இந்த பழக்கவழக்கங்கள் அனைத்தும் அடிப்படையானதுதான், புதிதாக ஏதுமில்லை. இருப்பினும், இந்த ஐந்து விஷயங்களை மனதில் கொள்வதன் மூலம் நீங்கள் எப்போதும் புத்திக்கூர்மையுடனும், இளமையாகவும் இருப்பீர்கள்.   

3 /8

1. மூளை சுறுசுறுப்பாக இயங்க அனைத்து ஊட்டச்சத்துகளும் சமமாய் கிடைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ், வைட்டமிண் பி, வைட்டமிண் இ, ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆகியவை மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பச்சை காய்கறிகள், பழங்கள், நட்ஸ், மீன் ஆகியவற்றில் இவை அதிகம் இருக்கும். எனவே, மூளை சுறுசுறுப்பாக இருக்க இதனை அடிக்கடி சமமான அளவில் உட்கொள்வது நல்லது.   

4 /8

2. எப்போதும் கவலையாக இருக்காதீர்கள். மன அழுத்தத்துடன் இருந்தால் மூளை செல்களில் ஞாபக சக்தி குறையும். இதற்காக யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, உங்களுக்கு பிடித்த விளையாட்டு அல்லது செயல்பாடுகள் எதையாவது செய்து உங்களின் அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.   

5 /8

3. தினமும் புதிர்கள், புது புது விஷயங்களை கற்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். தினமும் மூளைக்கு வேலைக்கொடுப்பதன் மூலம் நீண்ட நாள் அறிவாற்றலுடன் இருக்கலாம்.   

6 /8

4. உடற்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு மட்டுமின்றி மூளைக்கும் நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் மூளை செல்கள் ஆரோக்கியாக இருக்கும். எனவே, தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.   

7 /8

5. அதேபோல் தினமும் சரியான நேரத்திற்கு சரியான அளவிற்கு தூங்குங்கள். இரவு 10 மணிக்கு தூங்கி, காலை 6 மணிக்கு முன் எழுந்திருக்கும் வகையில் பழகுங்கள். 7-8 மணிநேரம் உறக்கம் உங்களின் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கும். புத்திக்கூர்மையுடன் இருக்கும் போது இளமையின் துடிப்பும் எப்போதும் இருக்கும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதற்கு Zee News பொறுப்பல்ல.