இந்த 7 அறிகுறிகள் இருந்தால்... தனிமையில் தவிக்கிறீர்கள் என அர்த்தம் - கண்டிப்பா படிங்க!

தனிமை உணர்வுதான் உலகில் தற்போதைய முக்கியமான ஆரோக்கியம் சார்ந்த பிரச்னை என உலக சுகாதார அமைப்பு (WHO) 2023இல் தெரிவித்துள்ளது. உடல்நலத்தில் இது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த 7 அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை இதில் காணலாம்.

இந்த நவீன காலகட்டத்தில் குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆரோக்கியமானது என்றாலும், தனிமை போன்ற மனநலச் சிக்கல்கள் அதன் பின்விளைவுகளாக பார்க்கப்படுகிறது.

 

 

 

1 /7

டிவியிலோ அல்லது ஓடிடி மூலம் மொபைலிலோ தொடர்ந்து பல மணிநேரங்கள் திரைப்படம் பார்ப்பதும், வெப் சீரிஸ் பார்ப்பதும் கூட தனிமையில் சிக்கியிருப்பதற்கான அறிகுறிதான்.  

2 /7

தனிமையில் இருக்கும் ஒருவர் தன் நண்பர்கள் வட்டத்தில் தனிமையாக இருக்கும் மற்றொருவருடன் அதிக நேரம் செலவழிப்பார் என கூறப்படுகிறது.   

3 /7

சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பது தனிமையில் சிக்கியதற்கான மிக முக்கிய அறிகுறியாகும்.   

4 /7

தனிமையில் இருப்பவர்கள் அடிக்கடி எதாவது பொருள்களை வாங்கிவைத்துக்கொள்வார்கள். தேவையின்றி, எந்த காரணமும் இன்றி பொருள்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். 

5 /7

உங்களை யாருமே புரிந்துகொள்ளவில்லை என்ற உணர்வு உங்களுக்கு அதிகம் ஏற்பட்டாலும் தனிமையில் சிக்கியிருப்பதற்கான அறிகுறிதான்.   

6 /7

நீண்ட நேரம் குளிப்பது மற்றும் அடிக்கடி வெந்நீரில் குளிப்பதும் கூட தனிமையில் சிக்கியிருப்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.   

7 /7

தனிமையில் இருப்போருக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்படும்.  பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. தனிமை உணர்வு குறித்து உங்களுக்கு சந்தேகம் வந்தால் உடனடியாக மனநல மருத்துவரிடம் தகுந்த ஆலோசனையை பெற வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதி செய்யவில்லை.