கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வருவது இயல்புதான். இருப்பினும், இயல்பைவிட அளவுக்கு அதிகமாக வியர்வை வந்தால் அதனை தடுக்க செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.
வியர்வை அதிகம் வெளியேறுவதால் உங்களின் உடலில் உள்ள சோடியம், போட்டாஸியம், குளோரைட் போன்ற எலக்ட்ரோலைட்களும் அதிகம் வெளியேறும் எனலாம்.
கோடை காலத்தில் ஒருவருக்கு அதிகம் வியர்ப்பது என்பது பல்வேறு காரணங்கள் இருக்கும். இருப்பினும் இந்த 5 விஷயங்களை செய்வதன் மூலம் அதனை தடுக்க முடியும். அதுகுறித்து இங்கு காணலாம்.
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அதாவது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது உடலின் வெப்பநிலையை சீராக்கும். இதனால் நீர்ச்சத்து குறைவால் உண்டாகும் வியர்வை தடுக்கப்படும்.
காரமான உணவுகளையும், காஃப்பின்களையும் தவிர்த்துவிடுங்கள். இவை அதிக வியர்வையை தூண்டலாம்.
தினமும் இரண்டு, மூன்று முறை குளிக்கலாம். குளிப்பதன் மூலம் கிருமிகளை சருமத்தில் இருந்து போக்கலாம். இது துர்நாற்றத்தையும் அதிக வியர்வை வெளியீடையும் தடுக்கும் எனலாம்.
மேலும் எப்போதும் காற்றோற்றமான இடத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள். நேரடியாக சூரிய வெளிச்சம் வரும் இடத்தில் இருக்க வேண்டும். எப்போதும் ஃபேன் அல்லது ஏசி ஆகியவை இருக்கும் அறையில் அமருங்கள்.
மேலும், ஆடைகளிலும் கவனம் செலுத்துங்கள். வியர்வையை உறிஞ்சும் துணிகளையும், வெயில் காலத்தில் வசதியான ஆடைகளையும் உடுத்துவது நல்லது. குறிப்பாக, பருத்தி மற்றும் லினன் துணிகளை உடுத்துவதன் மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால் வியர்வை ஏற்படுவது குறையும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.