Angaraga yogam: ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்துடன் கேது மற்றும் ராகு இணையும்போது உருவாகும் ஒரு ஜோதிட யோகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் ராகு/கேதுவுடன் செவ்வாயும் ஒரே வீட்டில் இருந்தால், அங்காரக யோகம் உருவாகிறது
கிரக பெயர்ச்சிகளின்போது, செவ்வாய் கிரகத்துடன் ராகு அல்லது கேது இணையும்போது தற்காலிகமாக அங்காராக யோகம் உருவாகிறது
செவ்வாய் மற்றும் ராகு இருவரும் மாரக ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபருக்கு அதிக கோபம் வரும். சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருக்கும். விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்
இரத்தம் மற்றும் தோல் தொடர்பான நோய்களால் பாதிப்பை ஏற்படுத்தும் அங்காரக தோஷம், காதலில் ஏமாறுச் செய்யும். அதேபோல, திருமண வாழ்க்கையும் நிம்மதியாக இருக்காது.
செவ்வாய் மற்றும் ராகுவின் பார்வை படும் வீடுகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி மேஷ லக்னம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு லக்னம், மீனம் லக்னம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகம் மிகவும் சாதகமாகும்
செவ்வாய் தோஷம் இருந்தால், செவ்வாய்க்கு பரிகாரம் செய்ய வேண்டும். அதேபோல, ராகு தோஷமாக இருந்தால், ராகுவுக்கான பரிகாரங்கள் மட்டுமே பலனளிக்கும்