இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவின் நிகர சொத்து மதிப்பு மற்றும் அவரிடமுள்ள ஆடம்பரமான சொத்துக்கள் பற்றிய தகவல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
ரியல் எஸ்டேட் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வரை 22 நிறுவனங்களில் செயல்படும் மஹிந்திரா குழுமத்தின் தலைவராக இருக்கும் ஆனந்த் மஹிந்திராவின் நிகர சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர்கள்.
இந்தியாவிலேயே மிக சொகுசான பகுதியாக கருதப்படும் மும்பையின் அல்டாமவுண்ட் சாலையில் தான் ஆனந்த் மஹிந்திராவின் வீடு அமைந்துள்ளது. கலையின் மீது இவருக்கு மிகப்பெரிய ஆர்வமுள்ளது, அதன் வெளிப்பாடாக பல விலைமதிப்பற்ற கலை பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறார்.
மஹிந்திரா ஸ்கார்பியோ, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, மஹிந்திரா ஸ்கார்பியோ என், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக், மஹிந்திரா TUV300, மஹிந்திரா XUV700 மற்றும் மஹிந்திரா தார் போன்ற உயர் ரக வாகனங்களை ஆனந்த் மஹிந்திரா வைத்திருக்கிறார்.
மஹிந்திரா அறக்கட்டளை மூலம், ஆனந்த் மஹிந்திரா பல தொண்டு முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்று பல உதவிகளை செய்து வருகிறார். மேலும் மஹிந்திரா குழுமம் மூலம் உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் இவர் தொழில் மேற்கொண்டு வருமானம் ஈட்டி வருகின்றார்.