பிடரி போல் தலைமுடி வளர... அதிகம் உதவும் எது? நெல்லிக்காய் vs கற்றாழை நன்மைகள்

Hair Growth Tips: தலைமுடி வளர்ச்சியில் அதிக நன்மை தருவது நெல்லிக்காயா அல்லது கற்றாழையா என்பது குறித்து இங்கு காணலாம். 

  • Sep 05, 2024, 20:12 PM IST

தலைமுடி பிரச்னைக்கு தகுந்த மருத்துவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தலைமுடியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் முக்கியமாகும்.

1 /8

ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு பல்வேறு இயற்கை சார்ந்த தீர்வுகளும், வீட்டு வைத்தியங்களும் இருக்கின்றன. அதில் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஆகியவை தவிர்க்க முடியாதவை.  

2 /8

இருந்தாலும், ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டில் எது அதிக நன்மையை தரும் என்பதை இங்கு காணலாம்.   

3 /8

நெல்லிக்காய் (Amla) முழுவதும் ஆண்டிஆக்ஸிடன்ட்களும், வைட்டமிண்களும் நிறைந்திருக்கின்றன. இதன் தலைமுடி வளர்ச்சிக்கும், வேர் வரையிலும் தாக்கம் செலுத்தக் கூடியவை ஆகும். இதனால் தலைமுடி வலுவாகி, முடி உடைதலும், தலைமுடி இரட்டிப்பாவதும் தடுக்கப்படும்.   

4 /8

தொடர்ந்து பயன்படுத்துவதால் அடர்த்தியானதலைமுடி வளர்ச்சியும், நீளமான முடியையும் பெறுவீர்கள். இதிலும் நல்ல பளபளப்பு உண்டாகும். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகு பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.   

5 /8

கற்றாழையில் (Aloe Vera) அதிக நீர்ச்சத்து இருக்கிறது. அதன் ஜெல் போன்ற தன்மையால், நீங்கள் தலையில் இதை தேய்த்துக்கொள்ளும்போது அதிக ஈர்த்தன்மையையும், குளிர்ச்சியையும் தரும். அது காய்ந்தால் கூட உங்களுக்கு இதமளிக்கும்.    

6 /8

கற்றாழையை பயன்படுத்துவதால் தலைமுடி மிருதுவாக மாறும். பட்டு போன்று தோற்றமளிக்கும். நல்ல ஈர்த்தன்மையுடன் பளபளப்பாக காட்சியளிக்கும். கற்றாழையால் தலையில் ஏற்படும் அரிப்புகள் மற்றும் எரிச்சல்கள் அடங்கும். கற்றாழையை நீங்கள் வீட்டிலேயே வளர்த்து அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.   

7 /8

இரண்டையும் ஒப்பிடுகையில், கற்றாழையை விட நெல்லிக்காய் அதிக ஆண்டிஆக்ஸிடன்ட்களை கொண்டிருப்பதால் தலைமுடி வளர்ச்சிக்கு கூடுதல் நன்மை அளிக்கும். இருப்பினும், தலைமுடியை இதமாக வைத்திருக்க கற்றாழையை பயன்படுத்துங்கள். உங்கள் தேவையை பொறுத்து இதில் எவை உங்களுக்கு சிறந்தவை என நீங்களே தேர்வுசெய்து கொள்ளலாம்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. தலைமுடி வளர்ச்சி குறித்த சந்தேகங்களுக்கு உரிய வல்லுநரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவும், இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.