Health Benefits of Turmeric: மஞ்சள் இல்லாத அஞ்சறைப் பெட்டியை பார்க்கவே முடியாது. உணவில் மஞ்சள் தூள் சேர்க்காமல் சமைப்பது சாத்தியமும் இல்லை. மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்களை அறிந்த முன்னோர்கள் சமையல் முதல் பூஜை மற்றும் சுப காரியங்களுக்கான சடங்குகள் வரை, அதனை பிரதானமாக வைத்துள்ளனர்.
மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் ஒளிந்து இருக்கின்றன என்பதை அறிந்த நமது முன்னோர்கள், அதன் முக்கியத்துவத்தை உணர்த்த, அதனை ஆன்மீகத்தோடும் தொடர்பு படுத்தி மக்கள் மனதில் பதிய வைத்துள்ளனர்.
Health Benefits of Turmeric: மஞ்சளின் மகிமை நம்மில் பலருக்கு முழுமையாக தெரிவதில்லை. புற்றுநோய் முதல் சாதாரண தொண்டைப்புண் வரையில், மருந்தாக மஞ்சள் கொடுக்கும் நிவாரணம் கணக்கில் அடங்காதவை.
வலி நிவாரணி: உடலில் ஏற்படும் வலி, வீக்கம் ஆகியவற்றை குறைக்க மஞ்சளை அரைத்து பற்றாக போடும் பழக்கம் உள்ளது. அதோடு புண்களை ஆற்றும் சக்தியும் மஞ்சளுக்கு உண்டு.
மூளை ஆரோக்கியம்: மஞ்சளுக்கு அல்ஸைமர் என்னும் ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உண்டு என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சரும ஆரோக்கியம்: மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. வலிகள் வீக்கம் ஆகியவற்றை நீக்கும் திறன் பெற்றது. நம் சருமத்தில் உள்ள கிருமிகளை அகற்றி சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கிறது
இதய ஆரோக்கியம்: மஞ்சள் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை உடைக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கலாம்.
கல்லீரல் ஆரோக்கியம்: கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி கல்லீரலை உள்ளிருந்து பலப்படுத்துகிறது.
உயர் இரத்த அழுத்தம்: பிபி என்னும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற அபாயம் பெருமளவு குறையும்.
சூரிய சக்தி: மஞ்சள் நிறம் சூரிய சக்தியை பிரதிபலிப்பதாக வேதங்கள் கூறுகின்றன. சூரிய மண்டலத்தின் காலச்சக்கரம் காரணமாகத்தான் பருவங்கள் மாறுபட்டு, இந்த உலகில் பயிர்கள் தளைத்து உயிர்கள் இந்த மண்ணில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.