இன்றைய காலகட்டத்தில் துரிதிலான வாழ்க்கையில், நாம் சந்திக்கும் உடல்நல பிரச்சனைகள் ஏராளம். இதனால் டாக்டர் விசிட்டுக்கு குறைவே இருப்பதில்லை. ஆனால், பல பிரச்சனைகளுக்களுக்கு, சில வீட்டு வைத்தியங்கள் மூலம் தீர்வு காணலாம்.
நாம் அன்றாடம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு, வீட்டு வைத்தியம் மூலமாகவே தீர்வுகளை காணலாம். அதில் உதவும் முக்கிய உணவு பொருளில் ஒஒன்று ஓமம்
ஓமம் பல்வேறு மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. சின்னஞ்சிறு மசாலா பொருளாக உள்ள ஓமம் தன்னுள் அடக்கியுள்ள மருத்துவ பண்புகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
இரத்த அழுத்தம்: ஓமத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஓம விதைகளை போட்டு கொதிக்க வைத்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
மூட்டு வலி: ஓமத்தில் அழற்ச்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், வாதம் மற்றும் மூட்டு வலிக்கு நல்ல நிவாரணத்தை கொடுக்கும். ஓம விதைகளை அரைத்து அதில் கடுகு எண்ணெய் கலந்து தடவினால், நிவாரணத்தை பெறலாம்.
கொலஸ்ட்ரால்: LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனை போக்க ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் தாதுக்கள் நிறைந்த ஓம விதை உதவும். காலையில் வெறும் வயிற்றில் ஓமம் நீர் அருந்துவது பலன் கொடுக்கும்.
ரத்த சர்க்கரை அளவு: நீரிழிவு நோயாளிகளுக்கு ஓம விதைகள் அருமருந்தாக இருக்கும். ஓமத்தில் நிறைந்திருக்கும் என்சைங்கள் கார்போஹைட்ரேட்டுகளை உடைக்க உதவுவதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
செரிமான பிரச்சனைகள்: வயிற்று வலி, வாயு, அஜீரணம் போன்ற பல வகையான செரிமான பிரச்சனைகளுக்கு, ஓமம் ஒன்றே போதும். ஓமநீர் அருந்துவதால் ஜீரண சக்தி அதிகரிக்கிறது.
உடல் பருமன் உள்ளவர்கள், ஓம நீரை தொடர்ந்து அருந்தி வருவதால், ஜீரண சக்தி மேம்பட்டு, வளர்ச்சியை மாற்றம் அதிகரிக்கிறது. இதனால் கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.