வெல்லம் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்குகிறது. இதைத் தவிர, வெல்லம் இன்னும் பல விஷயங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது. லால் கிதாப் என்ற புத்தகத்தின் கூற்றுப்படி, வெல்லத்தை சில குறிப்பிட்ட வழிகளில் பயன்படுத்தி, வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காணலாம். வெல்லத்தின் வெவ்வேறு தந்திரங்கள் ஒரு நபரின் வாழ்க்கையை செழிக்கச் செய்கின்றன. இதன் மூலம், வாழ்க்கையில் வரும் நிதிச் சிக்கல்களிலிருந்தும் விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தைத் தவிர வெல்லத்தால் நாம் பெறக்கூடும் பிற நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெல்லம் மற்றும் ஒரு நாணயத்தை சிவப்பு துணியில் கட்டி அன்னை லட்சுமியின் பாதத்தில் வைக்கவும். இதற்கு தூப-தீபம் காட்டி, பணம் வைக்கும் பெட்டகத்தில் வைக்கவும். இப்படிச் செய்தால், பணப்பற்றாக்குறை குறையத் தொடங்குகிறது.
செவ்வாய்க் கிழமை அன்று ஆஞ்சனேயருக்கு வெல்லத்தால் இனிப்புகளைச் செய்து படைக்கவும். வேண்டுமானால் வெல்லம் மற்றும் உளுந்தும் படைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்கி வாழ்வில் ஸ்திரத்தன்மை ஏற்படும். மேலும், இது நிதி சிக்கல்களில் இருந்து விடுபட உதவும். கடன் சுமையும் குறையும்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே பிரிவினையோ, சச்சரவுகளோ ஏற்பட்டால், அதை நீக்க செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் ஒன்றரை கிலோ வெல்லத்தை நிலத்தில் புதைத்து விடவும். இதன் மூலம் குடும்பத் தகராறுகள் முடிவுக்கு வருகின்றன.
திருமணத்தில் வரும் தடைகள் நீங்க, வெல்ல சூரணம் பலன் தரும். இதற்கு வியாழன் அன்று பசுவிற்கு வெல்லம் மற்றும் உளுந்து கொடுக்கவும். இது தவிர அரிசி மாவுடன் வெல்லம் சேர்த்து அதன் மீது சிறிது மஞ்சளைத் தடவி, பசுவுக்கு உணவாக அளிக்கவும். இப்படி செய்து வந்தால் விரைவில் திருமணத் தடை நீங்கி திருமணம் நடக்கும்.
நீங்கள் வேலையின்மை பிரச்சனையை எதிர்கொண்டால். நேர்காணலுக்குப் பிறகும் வேலையில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், வேலை தேடிச் செல்லும் முன், பசுவுக்கு ரொட்டியில் வெல்லம் கலந்து ஊட்டவும்.