புஷ்பா படத்தில் விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கியுள்ள அல்லு அர்ஜுன்!

Pushpa 2: அதிக எதிர்பார்ப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்களை பற்றி பார்ப்போம்.
1 /6

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.    

2 /6

முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து 2வது பாகமும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இதுவரை 300 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது.  

3 /6

சமீபத்தில் வெளியான அறிக்கைகளின்படி, அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் நடித்ததற்காக 300 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.  

4 /6

கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா ரூ.10 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்திற்கு 2 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.  

5 /6

எஸ்பி பன்வர் சிங்காக நடித்துள்ள ஃபஹத் பாசில், முதல் பாகத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நடித்து இருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகத் ரூ 8 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.  

6 /6

இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரீலீலா ரூ.2 கோடியும், முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சமந்தா ரூ.5 கோடியும் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.