நமது உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முக்கியம்.
ஊட்ட சத்து குறைபாடுகள் லேசான அறிகுறிகளாகத் தொடங்கலாம், ஆனால் கவனிக்கப்படாவிட்டால், அது இறுதியில் உங்களை பலவீனமாகவும் மிகவும் நோய்வாய்ப்படுத்தவும் செய்யும்.
நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முக்கியம். அதன் குறைபாடுகள் உடலில் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். உங்களை பலவீனமாகவும் மிகவும் நோய்வாய்ப்படுத்தவும் செய்யும்.
இரும்பு சத்தின் முதல் மற்றும் முக்கிய செயல்பாடு இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதாகும். உடலில் போதுமான அளவு இருக்பு சத்து இல்லாதபோது, ரத்தசோகை ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்: பலவீனம், வெளிரிய தோல், சோர்வு மற்றும் மூச்சுத் திணறல்.
நமது உடலின் உயிரணுக்களில் உள்ள டிஎன்ஏ மற்றும் மரபணுப் பொருட்களை உருவாக்க வைட்டமின் பி12 இன்றியமையாதது. மேலும் உடலின் நரம்பு செல்கள் மற்றும் இரத்தத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. குறைபாட்டின் அறிகுறிகளில் சோர்வு, பலவீனம், வெளிர் தோல், கால்கள் மற்றும் கைகளில் கூச்ச உணர்வு ஆகியவை அடங்கும்.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் எலும்பு அடர்த்திக்கும் கால்சியம் முக்கியமானது. இந்த ஊட்டச்சத்தின் குறைபாடு இருந்தால் தோன்றும் சில அறிகுறிகள், தசைப்பிடிப்பு, உடலில் கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் உடையக்கூடிய நகங்கள் ஆகியவை.
வைட்டமின் சி குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள் தசை வலி மற்றும் பலவீனம், மூட்டு வலி மற்றும் சோர்வு.
அயோடின் குறைபாடு எடை அதிகரிப்பு, சோர்வு, காயிட்டர் அல்லது கழுத்து வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் மற்றும் நபர் குளிர்ச்சியாக உணரலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.