Whatsapp Update: இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது!

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ்அப் ஆப் விரைவில் சில போன்களில் வேலை செய்யாது. எனவே பின்வரும் போன்களை வைத்திருப்பவர்கள் வேறு போன்களை மாற்ற வேண்டும்.
1 /6

பழைய மாடல் போன்களை இன்னும் பயன்படுத்தி வருபவர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதன்படி சில மாடல் ஐபோன்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.      

2 /6

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் iPhone 5s, iPhone 6 மற்றும் iPhone 6 Plus போன்ற மொபைல்களில் இனி வேலை செய்யாது என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த போன்களை பயன்படுபவர்கள் அப்டேட் செய்ய வேண்டும்.  

3 /6

வரும் மே 5, 2025 முதல் iOS 15.1க்கு முந்தைய மாடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது. இது வாட்ஸ்அப் மற்றும் வாட்ஸ்அப் பிசினஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.  

4 /6

iPhone 5s, iPhone 6 மற்றும் iPhone 6 Plus போன்களில் iOS 12.5.7க்கு பிறகு அப்டேட்கள் வருவதில்லை. இந்த மாடல்கள் வெளியாகி கிட்டத்ட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.   

5 /6

இது தவிர வேறு iPhone மாடல்களை கொண்ட பயனர்கள் 15.1க்குக் குறைவான iOS பதிப்பை கொண்டிருந்தாலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.  

6 /6

இருப்பினும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்கள் வழக்கம் போல தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்.