குடும்ப சூழல், அலுவலக சூழல் காரணமாக ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படும். இது மன நல பிரச்சனையை தாண்டி உடல் நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அதிக மன அழுத்தம் இருந்தால் முதலில் தலைவலி ஏற்படும். பிறகு தோல் பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருசிலருக்கு இதயத்தில் அழுத்தமும் ஏற்படும்.
மன அழுத்தம் இருக்கும் போது செரிமானத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. வயிற்றுவலி, குமட்டல், அஜீரணம், வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது கழுத்து பகுதி, தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் அதிக வலி ஏற்படும். தொடர்ச்சியான வலி இருக்கும் பட்சத்தில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மன அழுத்தம் அடிக்கடி ஏற்பட்டால் ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும். இந்த சமயத்தில் தலை மற்றும் கழுத்தில் உள்ள நரம்புகள், தசைகள் இருக்கமாகும். இவை ஒருவித அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
அதிகப்படியான மன அழுத்தம் இதயம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கிறது. அதிக மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
அதிகப்படியான மன அழுத்தம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்படைய செய்கிறது. இதனால் தொற்று நோய்கள் எளிதில் பரவும் அபாயம் உள்ளது.