உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? இந்த 5 அறிகுறிகள் தெரியும்!

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.  அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். 

 

1 /5

இரவு நேரங்களில் உங்கள் பாதங்களில் எரியும் உணர்வு ஏற்படலாம். இப்படி ஏற்பட்டால் உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.  

2 /5

இரவு தூங்கும் பொது நீண்ட நாட்களாக நெஞ்சு வலி ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். இது அதிக கொலஸ்ட்ராலின் அளவை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறியாகும்.  

3 /5

கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு இருந்தால் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறியாகும்.  குறிப்பாக இதனை இரவில் அதிகமாக உணர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.  

4 /5

இரவில் தூங்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது மூச்சுத் திணறலால் ஏற்பட்டு தூக்கத்தை இழந்தாலோ கண்டிப்பாக ஒருமுறை கொலஸ்ட்ராலை பரிசோதித்துக்கொள்வது நல்லது.  

5 /5

இரவில் பாதங்கள் குளிர்ச்சியாக இருப்பதும் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் விளைவாகும். இதனை உடனடியாக மருத்துவரை அணுகி சரிபார்ப்பது நல்லது.