மோசமான உணவுகள்: நம் எலும்புகளில் உள்ள அனைத்து தாதுக்களையும் உறிஞ்சி அவற்றை பலவீனப்படுத்தும் சில உணவுகள் உள்ளன. எந்தெந்த உணவுகள் எலும்பை வலுவிழக்கச் செய்யும் என்பதை இங்கு காணலாம்.
நம் உடலுக்கு வலுவை கொடுக்கும் எலும்பு, பலவீனப்பட்டால் அதனால் ஏற்படும் அவதிகள் ஏராளம். எனவே, அதனை பாதிக்கும் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.
உங்கள் உணவில் உப்பு அதிகம் இருந்தால், உடனடியாக அதை சாப்பிடுவதை நிறுத்துங்கள். அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் எலும்புகள் பலவீனமடைகின்றன. உப்பு எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி அவற்றை பலவீனமாக்குகிறது.
காபியை அதிகமாக உட்கொள்வது எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அதில் உள்ள காஃபின் உடலில் இருந்து கால்சியத்தை வெளியேற்றும்.
சோடா மற்றும் குளிர் பானங்கள் போன்ற பானங்களில் காஃபின் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. அதிகப்படியான காஃபின் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை பலவீனப்படுத்தும்.
பலர் வெளியே துரித உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், எலும்புகள் வலுவிழப்பது உட்பட பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.
அதிகப்படியான இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு சோடியம் உள்ளது, இது உடலில் இருந்து கால்சியத்தை வெளியேற்றி எலும்புகளை வலுவிழக்கச் செய்யும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்கலிய உறுதிப்படுத்தவில்லை.)