Honda Car Price Hike: ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
இந்த தகவலை அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜப்பானிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா தனது எலிவேட், சிட்டி மற்றும் அமேஸ் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது
டாடா, மாருதி ஆகிய கார் நிறுவனங்களை அடுத்து தற்போது ஹோண்ட நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது, ஜனவரி 1 முதல் வாகனங்களின் விலை அதிகரிக்கலாம்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் (மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை) குனால் பால், PTI உடனான உரையாடலில், உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருவதால் அதன் சுமையைக் குறைக்க அடுத்த மாதம் முதல் வாகனங்களின் விலையை உயர்த்தும் என்று கூறினார்
மாருதி சுசூகி நிறுவனம், புத்தாண்டு அதாவது ஜனவரி 1, 2024 முதல் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
தனது கார்களின் விலையை அதிகரிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்னதாக டாடா நிறுவனமும் அறிவித்தது. நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் மற்றும் மின்சார வாகனங்களின் விலையை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் உயர்த்த பரிசீலித்து வருகிறது.
எலிவேட் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தும் போது நிர்ணயிக்கப்பட்ட விலைகள் டிசம்பர் 23 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
ஆடி கார் நிறுவனமும் புத்தாண்டு அதாவது ஜனவரி 1, 2024 முதல் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை