ரூ. 60,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான பைக்குகள்: முழு பட்டியல் இதோ

தற்போது நிலவும் பணவீக்க காலத்தில், பைக் வாங்குவதற்கு அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது. சாதாரண பைக்குகளும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இந்த பட்ஜெட் உங்களுக்கு அதிகமாக இருந்தால், குறைந்த பட்ஜெட்டிலும் சிறந்த பைக்குகளை வாங்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 50-60 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிலும் நல்ல பைக்குகளை சந்தையில் விற்பனை செய்யும் சில நிறுவனங்கள் உள்ளன. ஹோரோ, பஜாஜ், டிவிஎஸ் மற்றும் பிற நிறுவனங்களின் சில மாடல்கள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கலாம். உங்கள் தேவைகளை நிறைவேற்றும் சக்தியும் இவற்றுக்கு உண்டு.

1 /5

ஹீரோ மோடோகார்ப் பைக்குகளில், ஹீரோ எஹெஃப் 100 சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பைக்கின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.51,450 ஆகும். இந்த பைக்கில், 97.2 சிசி, ஏர் கூல்ச் 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎஹ்சி இஞ்சின் உள்ளது. இது லிட்டருக்கு 65 முதல் 82.9 கிமீ மைலேஜ் அளிக்கும்.

2 /5

பஜாஜ் ஆட்டோவின் பஜாஜ் பிளாட்டினா 100 சந்தையில் 50-60 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதன் டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை ரூ.60,576 ஆகும். இந்த பைக்கில் 102 சிசி, 4-ஸ்ட்ரோக், டிடிஎஸ்-ஐ, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 75 முதல் 90 கிமீ ஆகும்.

3 /5

டிவிஎஸ் ஸ்போர்ட், டிவிஎஸ் மோட்டாரின் மிகவும் பிரபலமான பைக் ஆகும். டெல்லியில் இந்த பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.60,130 ஆக உள்ளது. இது சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ஃப்யூவல் இன்ஜெக்ஷன், ஏர் கூல்டு ஸ்பார்க் இக்னிஷன் எஞ்சின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 75 கிமீ ஆகும்.

4 /5

டிவிஎஸ் மோட்டார் வழங்கும் டிவிஎஸ் ரேடியான், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற பைக்காக இருக்கும். டெல்லி எக்ஸ்ஷோரூமில் அடிப்படை மாடலின் ஆரம்ப விலை ரூ.59,925 ஆகும். இதில் டூயல் டோன் டிஸ்க் வேரியண்ட்டை (டாப் வேரியண்ட்) எடுத்துக் கொண்டால் இதன் விலை ரூ.74,966 ஆக உள்ளது. இது 4 ஸ்ட்ரோக் துரா-லைஃப் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, நீங்கள் விரும்பினால், தற்போது மாதத்திற்கு ரூ.1999 இஎம்ஐ-லும் இதை வாங்கலாம். நிறுவனம் 6.99 சதவீத வட்டியில் நிதி உதவியும் அளிக்கின்றது.   

5 /5

60 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கும் குறைந்த பட்ஜெட்டில் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பைக்காக இருக்கும். இதன் டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை ரூ.66033 ஆகும்.