ஆதித்ய மங்கள யோகம்... சந்தோஷ மழையில் நனையப் போகும் ‘3’ ராசிகள்!

மகர ராசியில் சூரியனும் செவ்வாயும் இணைவதால் ஆதித்ய மங்கள ராஜயோகம் உருவாகும். இது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்ல, கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கிரகங்கள் இணைதல், கிரகங்கள் அஸ்தமனம் உதயம் ஆகியவையும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1 /6

மகர ராசியில் சூரியதேவன் இருக்கும் நிலையில், பிப்ரவரி 5, 2024 அன்று, செவ்வாய் மகர ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்நிலையில், மகர ராசியில் சூரியனும் செவ்வாயும் இணைவதால் ஆதித்ய மங்கள ராஜயோகம் உருவாகும். இது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்.

2 /6

சூரியனும் செவ்வாயும் இணைவதால்  கன்னி உள்ளிட்ட 2 ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். செல்வம், மன நிம்மதி, இன்பம் ஆகியவற்றை பெறப் போகும் இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

3 /6

சிம்மம்: வாழ்க்கையில் புதிய மாற்றங்களுக்கு தயாராகுங்கள். வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும். செல்வச் செழிப்பும், மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகும். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் திரும்பக் கிடைக்கும். வாழ்க்கையில் புதிய ஆச்சரியங்கள் ஏற்படும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து உழைக்க வேண்டும். இது நிச்சயம் வெற்றியைத் தரும்.

4 /6

கன்னி:  வாழ்க்கையில் புதிய சாதனைகளை அடைவீர்கள். பணியில் இருந்து வந்த தடைகள் விரைவில் நீங்கும். தொழில் வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். மனதில் இருந்த விரக்தி நீங்கும். ஆற்றல் மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

5 /6

துலாம்: வாழ்க்கையில் உற்சாகமான தருணங்களை அனுபவிப்பீர்கள். நண்பர்களின் உதவியால் பணியில் இருந்த தடைகள் நீங்கும். திருமண வாழ்வில் இனிமை இருக்கும். உறவுகளில் அன்பும் காதலும் ஏற்படும். உங்கள் இலக்குகளை அடைய உத்வேகத்துடன் தோன்றுவீர்கள். பேச்சில் இனிமை இருக்கும். உறவுகளில் கசப்புணர்வை அதிகரிக்காமல், உறவை வலுப்படுத்த முயற்சிக்கவும்.

6 /6

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.