கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்தால் போதும்

Cholesterol Control Tips: இன்றைய காலக்கட்டத்தில், தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால், நீரிழிவு முதல் இதய நோய்கள் வரை பல நோய்கள் அதிகரித்து வருகின்றன. 

Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது தற்போது பலரிடம் காணப்படும் ஒரு பிரபலமான பிரச்சனையாக உள்ளது. இதனால், சிறுவயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளுக்கு பலர் ஆளாகின்றனர். கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும். ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் (HDL), மற்றொன்று கெட்ட கொலஸ்ட்ரால் (LDL). நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கவும் உதவும் அந்த 5 உணவுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

1 /10

எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது நரம்புகளில் அழுக்குகளை நிரப்பி இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது மாரடைப்பு முதல் பக்கவாதம் வரை அனைத்தை பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. இது தவிர கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், கடுமையான நோய்களுக்கு ஆளாக வேண்டி வரலாம். கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்தால், அது உயிர் கொல்லியாகவும் மாறலாம். இருப்பினும், சரியான தினசரி மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம், கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம்.

2 /10

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதால், நரம்புகளில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கும். இதனால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைகிறது. இரத்த ஓட்டம் சீராகி, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்து, இதய ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

3 /10

சில இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம். இதற்கு நம் தினசரி டயட்டில் 5 உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கவும் உதவும் அந்த 5 உணவுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

4 /10

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், உங்கள் உணவில் மருந்துகளுடன் உலர் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில், முக்கியமாக அக்ரூட் பருப்புகள், முந்திரி மற்றும் பாதாம் சாப்பிடுவது அதிக அளவில் நன்மை பயக்கும். இவற்றில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து நரம்புகளில் படிந்துள்ள அழுக்குகளை வெளியேற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

5 /10

சமயலில் நாம் சேர்க்கும் பயறு வகைகள், ராஜ்மா, பச்சைப்பயறு, காராமணி போன்றவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். இவை கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுத்து இதய நோய் அபாயத்தை பெருமளவு குறைக்கின்றன. 

6 /10

கொழுப்பு நிறைந்த மீன் வகைகளான கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இந்த மீன்கள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

7 /10

உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு ஓட்ஸ் மிக நல்லது. கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு ஓட்ஸ் சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகின்றது. ஓட்சில் அதிக அளவில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது நரம்புகளில் படிந்திருக்கும் எல்டிஎல் கொழுப்பைக் குறைத்து, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது.

8 /10

ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இவை நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றன. இதை சமையலில் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.  

9 /10

இந்த உணவுகளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறை ஆகியவை அவசியம். உடல் செயல்பாடுகள், போதுமான தூக்கம், தண்ணீர், உடற்பயிற்சி ஆகியவையும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.