Nayanthara: நயன்தாராவின் போயஸ் கார்டன் இல்லம்..வைரல் போட்டோக்கள்!

Nayanthara : நடிகை நயன்தாரா, சமீபத்தில் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அவை, தற்போது வைரலாகி வருகிறது. 

Nayanthara : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர், நயன்தாரா. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக டாப் நடிகையாக திகழ்கிறார். இவருக்கு தென்னிந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. நயன்தாராவிற்கு, 2022ஆம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு, உயிர்-உலக் என்ற பெயர் கொண்ட இரட்டை பிள்ளைகளும் இருக்கின்றனர். நயன்தாரா, சில மாதங்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டனில் ஒரு வீட்டை வாங்கினாராம். அந்த வீட்டிற்கு முன் அவர் நிற்கும் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் நயன்தாரா. 

2 /8

சில ஆண்டுகளுக்கு முன்பு பிசியாக படங்களில் நடித்து வந்த இவர், தற்போது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

3 /8

நயன்தாரா, ஜவான் படம் மூலம் பாலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து, அவருக்கு கன்னடத்திலும் ‘டாக்சிக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

4 /8

சில நாட்களுக்கு முன்பு, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கும் நேசிப்பாயா பட விழா நடந்தது. இதில் நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

5 /8

நயன்தாரா, சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில், அவர் ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்தார். 

6 /8

இந்த வீடு, அவருடையதுதான் என கூறப்படுகிறது. த்ரிஷா, ரஜினிகாந்த் ஆகியோர் வசிக்கும் போயஸ் கார்டனில் இருக்கும் வீடு இது என தகவல் வெளியாகியிருக்கிறது. 

7 /8

நயன், சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த அழகு சாதன பொருட்கள் பிராண்டை ஆரம்பித்தார்.

8 /8

நயன்தாராவின் வீட்டை பார்த்த ரசிகர்கள், இதற்கு லைக்ஸை குவித்து வருகின்றனர்.