மழையில் கார் ஓட்டும் போது இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்!

மழையில் வாகனம் ஓட்டுவது மிகவும் சிரமமான ஒன்று. எனவே விபத்துகளை தவிர்க்க மழைக்காலங்களில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

1 /6

தற்போது வெயில் காலம் முடிந்த மழைகாலம் துவங்கி உள்ளது. மழையில் கார் ஓட்டுவது மிகவும் கடினமான ஒன்று. எனவே அத்தியாவசிய உபகரணங்களை வைத்து கொள்ள வேண்டும்.

2 /6

மழை காலங்களில் காரை வெளியில் நிறுத்தி இருந்தால் முடிந்தவரை நல்ல தரமான கவரை பயன்படுத்துவது நல்லது. இது காரை துருபிடிக்காமல் பாதுகாக்கிறது.

3 /6

சேறு மற்றும் சகதிகள் நிறைந்த சாலையில் பயணம் செய்து இருந்தால், உடனே காரை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் அழுக்கு படிந்து சக்கரங்கள் எளிதியில் துருபிடிக்கலாம்.

4 /6

மழைக்காலத்தில் எப்போதும் ஜன்னல்கள் மூடியே இருக்கும் என்பதால், மழை இல்லாத சமயத்தில் ஜன்னல்களை திறந்து வைப்பது நல்லது. அதே சமயம் காருக்குள் கொசு சேராமலும் பார்த்து கொள்ள வேண்டும்.

5 /6

அதே போல காரின் ஜன்னல்களை நன்கு சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். மழை மற்றும் வெயில் காரின் ஜன்னல்களில் நேரடியாக படுவதால் பழுதாக வாய்ப்புள்ளது.  

6 /6

மழைக்காலத்தில் காரின் உட்பகுதியும் அதிகம் அழுக்காகிறது. சகதி மற்றும் மண் போன்றவரை ஒட்டிக்கொண்டு கார் முழுவதும் படிக்கிறது. எனவே நல்ல தரை விரிப்பை காரில் பயன்படுவது நல்லது.