Megha Akash :மேகா ஆகாஷிற்கு விரைவில் திருமணம்! நிச்சயதார்த்தம் முடிந்தது..மாப்பிள்ளை யார்?

Megha Akash Saai Vishnu Engagement Photos : தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான மேகா ஆகாஷிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கல்யாண மாப்பிள்ளை யார் தெரியுமா?

Megha Akash Saai Vishnu Engagement Photos : தமிழில் ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமாகி, பின்னாளில் முன்னணி நடிகையாக வளர்ந்தவர் மேகா ஆகாஷ். சென்னை பெண்ணான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதுவரை ரஜினிகாந்த், தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தானம், சிவா என பல்வேறு ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர், இவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் வகையில் மேகா, தற்போது சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவை, அவரது நிச்சயதார்த்த புகைப்படங்களாகும். 

1 /8

தெலுங்கில், ‘லை’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். இவரை, தமிழ் ரசிகர்கள் முதன் முதலில் பார்த்தது ‘பேட்ட’ படம் மூலமாகத்தான். 

2 /8

சென்னையை சேர்ந்த இவர், தெலுங்கில் சில படங்களில் நடித்த பிறகு, தமிழில் வந்தா ராஜாவா தான் வருவேன்,  பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

3 /8

மேகா ஆகாஷ்-தனுஷ் நடிப்பில் பல நாட்களாக வெளிவராமல் இருந்த படம், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்ற அளவிற்கு படம் வரவேற்பை பெறவில்லை. எனினும் மேகா ஆகாஷின் நடிப்பு, இப்படத்தில் பெரிதாக பேசப்பட்டது. 

4 /8

மேகா ஆகாஷ், தமிழை விட தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த  “மழை பிடிக்காத மனிதன்” படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

5 /8

மேகா ஆகாஷிற்கு தற்போது 28 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் தனது திருமணம் குறித்த தகவலையும், கூடவே நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். 

6 /8

மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம், உறவினர்கள் மட்டும் பங்கேற்க, சிம்பிளாக நடந்ததாக கூறப்படுகிறது. 

7 /8

மேகா ஆகாஷிற்கு திருமணம் என்ற செய்தி ஒரு சில ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், அனைவரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

8 /8

மேகா ஆகாஷும், சாய் விஷ்ணுவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் எப்போது என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.