8th Pay Commission: பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டன. இதற்கான அறிவிப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது.
8th Pay Commission: 8வது மத்திய ஊதியக் குழுவில் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கும். இப்போது 8வது ஊதியக் குழுவில் ஊழியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக மாற வாய்ப்புள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.34,560 ஆகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.17,280 ஆகவும் உயரலாம். இதனால் சுமார் 44% ஊதிய உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். வழக்கமான முறைப்படி பார்த்தால், இந்த ஆண்டுக்குள் இதற்கான அறிவிப்பு வர வேண்டும் என்பதால், இதற்கான நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டன. இதற்கான அறிவிப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின்னர் அதற்கான பணிகள் தொடங்கி, அது 2016 -இல் அமலுக்கு வந்தது. இதனால், சுமார் 1 கோடி ஊழியர்கள் பயனடைந்தனர்.
அடுத்த ஊதியக்குழு மிகப்பெரிய நிதி நன்மைகளை அளிக்கும் என்பதால் ஊழியர்கள் இதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமலாக்கப்படுவதால், மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 8வது ஊதியக் குழுவை ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் (Pension) பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நம்பப்படுகின்றது.
எனினும், 7வது ஊதியக் குழுவில் அதன் கால அவகாசம் 2025 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடையும் என்று கூறப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 10 ஆண்டுகளில் இந்த முறை புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்படுமா இல்லையா என்ற குழப்பமும் உள்ளது. 8வது ஊதியக்குழு குறித்து இதுவரை அரசு தரப்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடந்த ஓராண்டாக ஊழியர் சங்கங்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தன.
எனினும், பட்ஜெட் முடிந்த பிறகு இது குறித்து பேசிய நிதித்துறை செயலாளர் டிவி சோமநாதன் 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டில்தான் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு இன்னும் அதிக நேரம் உள்ளது என்றும் கூறினார். இது சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு ஊதியக்கமிஷன்களில் ஊழியர்களுக்கு கிடைத்த சம்பள உயர்வின் விவரம் இதோ: 4வது மத்திய ஊதியக் குழு - சம்பள உயர்வு: 27.6%, குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 750; 5வது மத்திய சம்பள கமிஷன் - சம்பள உயர்வு: 31%, குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 2,550; 6வது மத்திய சம்பள கமிஷன் - ஃபிட்மென்ட் ஃபேக்டர்: 1.86 மடங்கு, சம்பள உயர்வு: 54%, குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 7,000; 7வது மத்திய ஊதியக் குழு - ஃபிட்மென்ட் ஃபாக்டர்: 2.57 மடங்கு, சம்பள உயர்வு: 14.29%, குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 18,000
8வது சம்பள கமிஷன் வருமா, வராதா என்பது மிகப்பெரிய கேள்வியகா உள்ளது. இதைப் பற்றி இரண்டு வெவ்வேறு கருத்துகள் உள்ளன. அடுத்த ஊதியக் குழு குறித்து அரசாங்கம் இப்போதே பரிசீலிக்காது என்று ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். ஆனால், மற்றொரு தரப்பு 8வது உதியக்கமிஷன் கண்டிப்பாக வரும் என்றும், ஆனால் அதற்கான அறிவிப்பு வர நேரம் ஆகலாம் என்றும் கூறுகிறார்கள். இதற்கு இன்னும் போதுமான நேரம் உள்ளது என்பது இவர்களது வாதமாக உள்ளது.
6வது ஊதியக் குழுவில் இருந்து 7வது ஊதியக் குழுவுக்கு மாறியபோது, ஊழியர் சங்கம் சம்பள திருத்தத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசாங்கம் அதை 2.57 ஆகவே வைத்தது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7000ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது தவிர, குறைந்தபட்ச ஓய்வூதியமும் ரூ.3500ல் இருந்து ரூ.9000 ஆக உயர்ந்தது. பணிபுரியும் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2.50 லட்சமாகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1.25 லட்சமாகவும் மாறியது.
8வது மத்திய ஊதியக் குழுவில் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கும். இப்போது 8வது ஊதியக் குழுவில் ஊழியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக மாற வாய்ப்புள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.34,560 ஆகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.17,280 ஆகவும் உயரலாம். இதனால் சுமார் 44% ஊதிய உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரும் நிவாரணத்தை அளிக்கும். 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், பிற கொடுப்பனவுகளிலும் (Allowances) மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். இதனால் ஊழியர்களுக்கு அதிக அளவு சம்பள உயர்வு கிடைக்க வயப்புள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.