பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகை க்ரித்தி ஷெட்டி?

'உப்பென்னா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து பிரபலமான நடிகை க்ரித்தி ஷெட்டி, தன்னை பற்றி வரும் வதந்திகளை எண்ணி வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

1 /5

ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படமான 'உப்பென்னா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பல ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி.  

2 /5

முன்னர் பாலாவின் 'வணங்கான்' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஒப்பந்தமாகியிருந்தார்.  அதன்பிறகு பாலா-சூர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து சூர்யா விலக, படத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இப்படத்திலிருந்து க்ரித்தியும் விலகினார்.  

3 /5

க்ருத்தி ஷெட்டியின் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு தெலுங்கு/தமிழ் இருமொழிக படங்களான  'வாரியர்' மற்றும் 'கஸ்டடி' ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.  

4 /5

இன்னும் 20 வயது கூட நிரம்பாத க்ரித்தி ஷெட்டி தன்னை வயதான தோற்றத்தில் காண்பிக்க, பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தெலுங்கு திரையுலகில் வதந்திகள் பரவிய நிலையில், நடிகை கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.  

5 /5

தன்னை பற்றி வரும் வதந்திகள் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கவலையளிப்பதாகவும், சில சமயம் ஹேர்ஸ்டைல் மாற்றுவதால் முகத்தோற்றம் வேறு மாதிரி தெரிகிறது என்றும், அதிகமாக மேக்கப் போடுவதால் சில சமயம் முகத்தோற்றம் வேறுபட்டு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.