Sivakarthikeyan : சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை? வைரலாகும் பாேட்டோஸ்..

Actor Sivakarthikeyan 3rd Baby :நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

Actor Sivakarthikeyan 3rd Baby : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள், முன்னணியில் இருக்கிறார், சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடித்த அயலான் படம் வெளியானதை தொடர்ந்து, தற்போது அமரன் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 2010ஆம் ஆண்டு தனது முறைப்பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 /8

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கர்களுள் ஒருவராக இருப்பவர், சிவகார்த்திகேயன். இவர், தொகுப்பாளராக இருந்து சினிமா நடிகராக மாறியவர். 

2 /8

தொகுப்பாளராக இருந்த போதே இவருக்கு பல ரசிகர்கள் இருந்தனர். மெரினா படம் மூலம் இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

3 /8

சிவகார்த்திகேயன் திரையுலகில் பிரகாசிப்பதற்கு முன்பே 2010ஆம் ஆண்டில் தனது முறைப்பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். 

4 /8

இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் தாச் என இரு குழந்தைகள் இருக்கின்றனர். 

5 /8

தற்போது, சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

6 /8

சிவகார்த்திகேயன், தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். 

7 /8

அவ்விழாவில் ஆர்த்தியின் வயிறு கர்ப்பிணிகளின் வயிறு போல பெரிதாக இருந்தது. இதனால், இவர் கர்ப்பமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

8 /8

இருப்பினும் ஆர்த்தி கர்ப்பமாக இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.