சென்னையில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டை இடித்த அரசு அதிகாரிகள்?

சென்னையில் உள்ள நடிகர் அஜீத் வீட்டின் ஒரு பகுதியை அரசு அதிகாரிகள் இடித்து உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி பேசுபொருளாக மாறி உள்ளது.  

 

1 /5

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத் தற்போது 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் அஜர்பைஜானில் இருக்கிறார்.   

2 /5

அஜித்குமார், அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அனுஷ்கா, ஆத்விக் ஆகியோர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொகுசு வீட்டில் வசித்து வருகின்றனர்.   

3 /5

இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வரும் நிலையில், சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களின் சில பகுதிகள் இடிக்கப்படுகின்றன.  

4 /5

நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைத்துறையினர் இப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது நடிகர் அஜித்குமார் வசித்து வரும் வீட்டின் முன்புற வாயிலில் இருந்த கேட் மற்றும் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது.  

5 /5

அஜித்குமாரின் வீட்டின் ஒரு பகுதி மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள 50 வீடுகளையும் அதிகாரிகள் நான்கு கிலோமீட்டர் தூரம் வரை இடித்து தரைமட்டமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பணி இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.