SBI vs HDFC vs ICICI வங்கிகள்... FD முதலீடுகளுக்கு வட்டியை அள்ளித் தரும் வங்கி எது

FD வட்டி விகிதங்கள்:  FD முதலீடு மிகவும் பாதுகாப்பானது. பணத்தை இழக்கும் அபாயம் இல்லை.  அதனால் தான் இது பெரும்பாலனிரின் முதலீட்டு விருப்பத்தில் முதலிடத்தில் உள்ளது. வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்க போட்டி போட்டுக் கொண்டு, வட்டி வ்கிதத்தை அதிகரித்து வருகின்றன.  

FD முதலீடு செய்யும் போது, ​​பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் FD முதலீடுகளில் அதிகபட்ச பலனைப் பெறலாம். 

1 /6

Interest Rate on FDs: நிலையான வைப்பி நிதி என்னும் FD முதலீடுகளுக்கு எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி,பேங்க் ஆப் பரோடா, உள்ளிட்ட வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.

2 /6

பாரத ஸ்டேட் வங்கி (SBI) 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான எஃப்டி முதலீட்டிற்கு அதிகபட்சமாக 7 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது. அதே நேரத்தில், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான FDகளில் முதலீட்டாளர்களுக்கு 6.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

3 /6

HDFC வங்கி 18 முதல் 21 மாதங்கள் வரையிலான FD முதலீடுகளுக்கு, அதிகபட்சமாக 7.25 சதவிகிதம் அதிகபட்ச வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், 2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரையிலான FD முதலீடுகளுக்கு 7.15 சதவீத வட்டி வழங்குகிறது. 

4 /6

ஐசிஐசிஐ வங்கி 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை எஃப்டிக்கு அதிகபட்சமாக 7.20 சதவீதம் வட்டி வழங்குகிறது. அதே நேரத்தில், 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD மீது முதலீட்டாளர்களுக்கு 7 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.

5 /6

பாங்க் ஆஃப் பரோடா (BoB) வங்கி 2 முதல் 3 வருட FD முதலீடுகளுக்கு, அதிகபட்சமாக 7.25 சதவிகிதம் வட்டி அளிக்கிறது. அதே நேரத்தில், வங்கி 399 நாட்களுக்கான  FD முதலீடுகளுக்கு, 7.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 

6 /6

குறிப்பு: வங்கிகளின் வட்டி விகிதங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை. எனவே, முதலீடு செய்யும் முன் வங்கிகளிடம் ஒரு முறை விபரங்களை சரிபார்ப்பது சிறந்தது.