8th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரமாக இருக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
8th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகையால், அடிப்படை சம்பளம் அதிகரிக்க வேண்டுமானால் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்க வேண்டும். பொதுவான புதிய ஊதியக்குழுவை அமைக்கும் போதுதான் அரசு ஃபிட்மெண்ட் ஃபாக்டரையும் அதிகரிக்கின்றது. இப்படி பல காரணங்களால் மிக விரைவில் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என நம்பப்படுகின்றது.
நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் மத்திய அரசு ஊழியர்கள் யாரேனும் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இன்னும் சில நாட்களில் ஜூலை 2024 -க்கான டிஏ ஹைக் உட்பட மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாட்டில் உள்ள மத்திய அரசு ஊழியர்களும் ஊழியர் சங்கங்களும் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் சம்பள கட்டமைப்பை மாற்ற புதிய ஊதியக் குழுவை கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என பெரிய அளவில் எதிர்பார்கப்பட்டது. ஆனால், அவர் எந்த வித அறிவிப்பும் வெளிவராதது பெரிய ஏமாற்றத்தை அளித்தது. 8வது ஊதியக்குழுவை குறித்து இன்னும் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
எனினும், சில நாட்களுக்கு முன்னர் நிதிச் செயலர் டிவி சோமநாதன் அளித்த பேட்டியில், 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டுதான் வரவேண்டும் என்றும், அதற்கு இன்னும் காலம் உள்ளது என்றும் கூறினார். இதன் மூலம் அரசு 8வது ஊதியக்குழுவை கொண்டு வரும் எண்ணத்தில் உள்ளது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
அடிப்படை ஊதியம்: ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரமாக இருக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட வேண்டுமானால் அதற்கு சில வழிமுறைகள் உள்ளன.
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகையால், அடிப்படை சம்பளம் அதிகரிக்க வேண்டுமானால் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்க வேண்டும். பொதுவான புதிய ஊதியக்குழுவை அமைக்கும் போதுதான் அரசு ஃபிட்மெண்ட் ஃபாக்டரையும் அதிகரிக்கின்றது.
எப்படியும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில், 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வர வேண்டும். இப்படி பல காரணங்களால் மிக விரைவில் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என நம்பப்படுகின்றது.
8வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 20% முதல் 35% வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது. லெவல் 1 ஊழியர்களின் சம்பளம் சுமார் ரூ.34,560 ஆகவும், லெவல் 18 ஊழியர்களின் சம்பளம் ரூ.4.8 லட்சமாகவும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
7வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7000ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்ந்தது. 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்து, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், குறைந்தபட்ச ஊதியம் மாத சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து ரூ. 26,000 ஆக அதிகரிக்கும், அதாவது சுமார் 44 சதவிகித ஊதிய உயர்வு இருக்கும்.
7வது ஊதியக்குழு அமைக்கப்படும்போதே ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் இருந்தன. ஆனால், அப்போது அது 2.57 மடங்காகவே மாற்றப்பட்டது. ஆகையால் 8வது ஊதியக்குழுவில் கண்டிப்பாக இது 3.68 மடங்காக உயரும் என நம்பப்படுகின்றது.
8வது ஊதியக்குழு சம்பள கட்டமைப்பு முழுவதிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இது பொருளாதார ரீதியாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்தாரர்களுக்கு நிவாரணத்தை அளிக்கும். நாட்டின் ஒரு கோடியே 12 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழுவின் நேரடிப் பலன்களைப் பெறுவார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.