புதிய T3 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விற்பனை Flipkart இல் இன்று இரவு ஏழு மணிக்கு தொடங்கியது. செப்டம்பர் மாதம் 12ம் தேதி அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,999 என பட்டியலிடப்பட்டுள்ளது
இருந்தாலும், Vivo T3 Ultra விற்பனையில் இரண்டு தந்திரங்களை பயன்படுத்தினால் 6000 ரூபாய் வரை சேமிக்கலாம்.... DSLR கேமராவுடன் கூடிய அட்டகாசமான போன்...
HDFC வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலம் வாங்கினால் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும்.
எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கூடுதலாக மூவாயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
அதாவது, Flipkartஇல் HDFC வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் வாங்கும்போது, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் வாங்கினால், போனை 22, 9999 ரூபாய்க்கு வாங்கலாம்.
Vivo T3 Ultra இன் சிறப்பு அம்சம் அதன் கேமரா ஆகும், DSLR அனுபவத்தை தரும் 50MP பிரதான கேமராவில் Sony IMX921 சென்சார் இருக்கும், இது பிரகாசமான சூரிய ஒளி மற்றும் குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல படங்களை எடுக்கும்
ஸ்மார்ட்போனில் 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 50 எம்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
6.78 இன்ச் 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த செயலியைக் கொண்டிருக்கும்
6.78 இன்ச் 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் T3 அல்ட்ரா போனின் ரெசல்யூசன் 1.5k இருக்கும். காட்சியின் புதுப்பிப்பு வீதம் 120Hz மற்றும் உச்ச பிரகாசம் 4500 nits ஆகும். இந்த ஃபோன் HDR 10+ ஐ ஆதரிக்கும்.
Mediatek Dimensity 9200+ SoC சிப்செட் ஆகும், இது மிகவும் சக்திவாய்ந்த சிப் ஆகும். ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி உள்ளது, இது 80W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வரும்.