மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு கணக்கீடு இதோ

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த புதுப்பிப்பு உள்ளது. அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7th Pay Commission: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. அகவிலைப்படியில் 3% அதிகரிப்பு ஏற்பட்டால், ஊழியர்களின் அகவிலைப்படியில் ரூ.1,00,170 வரையிலான நன்மை கிடைக்கலாம். இந்த அதிகரிப்பு தர ஊதியம் மற்றும் சம்பளத்தைப் பொறுத்து மாறுபடும். 

1 /14

2 /14

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய அப்டேட் உள்ளது. அவர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்த நல்ல செய்தி அவர்களுக்கு கிடைக்கவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் ஒரு முறை அதிகரிக்கப்படவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மீண்டும் கணிசமான உயர்வு இருக்கும். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.   

3 /14

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த புதுப்பிப்பு உள்ளது. அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் (Dearness Relief) 53% அதிகரிக்கும். 

4 /14

ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரி மாத அகவிலைப்படி முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையிலும் கணக்கிடைப்படுகின்றது.

5 /14

ஜூன் 2024 -க்கான அகவிலைப்படி ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. ஜூன் 2024க்கான AICPI குறியீட்டு எண்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது வெளிவந்தவுடன்தான் ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வின் (DA Hike) தெளிவான விவரம் தெரியும். 

6 /14

ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. அகவிலைப்படியில் 3% அதிகரிப்பு ஏற்பட்டால், ஊழியர்களின் அகவிலைப்படியில் ரூ.1,00,170 வரையிலான நன்மை கிடைக்கலாம். இந்த அதிகரிப்பு தர ஊதியம் மற்றும் சம்பளத்தைப் பொறுத்து மாறுபடும். 

7 /14

இதுவரை ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஏஐசிபிஐ எண்கள் வந்துள்ளன. ஜனவரியில், ஏஐசிபிஐ குறியீட்டு எண் 138.9 புள்ளிகளாக இருந்தது, இதன் காரணமாக அகவிலைப்படி 50.84 சதவீதமாக அதிகரித்தது. அதன் பின்னர் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் பிப்ரவரியில் 139.2 புள்ளிகளாகவும், மார்ச் மாதத்தில் 138.9 புள்ளிகளாகவும், ஏப்ரலில் 139.4 புள்ளிகளாகவும், மே மாதத்தில் 139.9 புள்ளிகளாகவும் இருந்தன. இதன் அடிப்படையில், அகவிலைப்படி ஜனவரி முதலனா மாதங்களில் 51.44 சதவீதம், 51.95 சதவீதம், 52.43 சதவீதம் மற்றும் 52.91 சதவீதம் என உயர்ந்துள்ளது.

8 /14

7வது ஊதியக் குழுவின் படி, டிஏ (DA) அதிகரிப்பு ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 2024 முதல் அகவிலைப்படியில் பெரும் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். இந்த உயர்வு, 7வது ஊதியக் குழுவின் காலமுறைத் திருத்தத்தின் ஒரு பகுதியாகும்.

9 /14

ஜூலை 2024 -இல் அகவிலைப்படி (Dearness Allowance) 3% அல்லது 4% அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும். இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். ஏற்கனவே 8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பு எதுவும் வராததால் ஏமாற்றத்தில் உள்ள ஊழியர்களுக்கு டிஏ ஹைக் சிறிய மகிழ்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

10 /14

அகவிலைப்படி 3% அதிகரித்தால், மொத்த டிஏ 53% ஐ எட்டும். தர ஊதியம் ரூ. 1800 முதல் ரூ. 2800 வரை உள்ள லெவல் 1 முதல் 5 வரை பார்த்தால், பே பேண்ட் 1ல் (ரூ. 5200 முதல் ரூ.20200 வரை) ஒரு ஊழியரின் சம்பளம் ரூ. 31,500, ஆக இருந்தால், டிஏ 53 சதவீதம் என்ற விகிதத்தில், மொத்த அகவிலைப்படி ரூ.1,00,170 ஆக இருக்கும். தற்போது 50 சதவீதத்தில் இந்த ஊழியர்கள் 6 மாத அடிப்படையில் ரூ.94,500 பெறுகிறார்கள். தற்போதுள்ள அகவிலைப்படியில் இருந்து வித்தியாசத்தைப் பற்றி பேசினால், மாத சம்பளம் ரூ.945 அதிகரிக்கும். 6 மாதங்களில் மொத்தம் ரூ.5670 அதிகரிக்கும்.

11 /14

ஊழியரின் அடிப்படை சம்பளம்-ரூ.31,500; தற்போதைய அகவிலைப்படி (50%) - ரூ 15,750/மாதம்; 6 மாதங்களுக்கு அகவிலைப்படி (50%) - ரூ 94,500; புதிய அகவிலைப்படி (53%) - ரூ 16695/மாதம்; 6 மாதங்களுக்கு அகவிலைப்படி (53%) 16695X6= ரூ 1,00,170

12 /14

பணவீக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். அகவிலைப்படி உயர்வு எப்போது வெளிவரப்பட்டாலும், அடுத்த மாதம் முதல், ஜூலை 2024 முதலான டிஏ அரியர் தொகையும் (DA Arrears) கிடைக்கும். 

13 /14

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகின்றது. தொழிலாளர் பணியகம் வெளியிடும் ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது.  பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதிய உயர்வு மாற்றங்களைச் செய்வது இதன் நோக்கமாக உள்ளது. 

14 /14

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.