7th Pay Commission: கொரோனா தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட நிதி சிக்கல்களை சமாளிக்க 3 தவணைகளுக்கான அகவிலைப்படியை அரசு முடக்கியது. அந்த தொகை, அதிக தேவையில் இருந்த நலிந்த பிரிவு மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
7th Pay Commission, DA Arrears: 18 மாத டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகையை அளிக்க வாய்ப்பு இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தொடர்பாக அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இப்போது 2025 ஆம் ஆண்டில், பட்ஜெட்டில் நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) குறித்து மோடி அரசாங்கம் அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அதனால் கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.
7வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் சில நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றில் 8வது ஊதியக்குழு, ஜனவரி 2025 -க்கான டிஏ உயர்வு, 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை ஆகிய அனைத்தும் அடங்கும். இவை அனைத்தும் கிடைக்கும் என்று கூற முடியாவிட்டாலும், இவற்றை பற்றிய தெளிவை இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
இவற்றில் 18 மாத அரியர் தொகை குறித்த சில முக்கிய அப்டேட்களை இந்த பதுவில் காணலாம். மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருக்கும் 18 மாத அரியர் தொகை குறித்து அவர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்களை கொடூரமாய் ஆட்கொண்ட கொரோனா நோய்த்தொற்று அனைத்து நாடுகளையும் நாட்டு மக்களையும் கடும் தொல்லைக்கும் அச்சத்திற்கும் ஆளக்கியது. அப்போது உருவான அசாதாரண சூழலால் அனைத்து நாடுகளும் நிதி நெருக்கடியை சந்தித்தன.
இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. கொரோனா தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட நிதி சிக்கல்களை சமாளிக்க 3 தவணைகளுக்கான அகவிலைப்படியை அரசு முடக்கியது. அந்த தொகை, அதிக தேவையில் இருந்த நலிந்த பிரிவு மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய மூன்று தவணைகளை நிறுத்த அரசு முடிவு செய்யப்பட்டது. நிலைமை சற்று சரியானவுடன் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டது. எனினும், முடக்கப்பட்ட அகவிலைப்படியின் அரியர் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து, இந்த நிலுவைத் தொகையை வழங்குமாறு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
18 மாத டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகையை அளிக்க வாய்ப்பு இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தொடர்பாக அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இப்போது 2025 ஆம் ஆண்டில், பட்ஜெட்டில் நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) குறித்து மோடி அரசாங்கம் அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அதனால் கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களின் பிரதிநிதித்துவ அமைப்பான கூட்டு ஆலோசனை அமைப்பின் செயலர் சிவ கோபால் மிஸ்ரா, 18 மாத நிலுவைத் தொகை வழங்குவது குறித்து அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தொற்றுநோயால் நிதி நிலைமையில் சிக்கல் இருந்தது, ஆனால் இப்போது நாடு பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது என்று அவர் கூறியுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகையும் வழங்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டிஏ அரியர் தொகை வழங்கப்பட்டால், ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் வரை கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாஜக தலைமையிலான அரசாங்கம் மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்யப்பட்டமுதல் பட்ஜெட்டில் அரசாங்கம் அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
டிஏ நிலுவைத் தொகையை தகுதியான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் மூன்று தவணைகளாக டெபாசிட் செய்யவும் அரசு திட்டமிட்டு வருவதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.
இதற்கிடையில், ஜனவரி மாத டிஏ உயர்வு, 8வது ஊதியக்குழுவின் (8th Pay Commission) அறிவிப்பு ஆகியவற்றுக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். 8வது ஊத்யக் குழுவிற்கான அறிவிப்பும் பட்ஜெட் 2025 -இல் வரலாம் என கூறப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி அரியர் தொகை அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.