7th Pay Commission: ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்கள் காட்டில் பண மழை, விவரம் உள்ளே

ஜூலை 1 முதல் டிஏ சலுகைகள் மீண்டும் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் கொடுப்பனவில் அதிகப்படியான அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். 

இதற்கு முன்னர் நிலுவையில் இருந்த அனைத்து தொகைகளும் இப்போது திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது உள்ளது. 

1 /5

7 வது ஊதியக்குழுவின் சமீபத்திய புதுப்பிப்புகள்: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். நிலுவையில் உள்ள மூன்று தொகைகளும் மீண்டும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

2 /5

கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய தேதிகளில் வழங்கப்பட வேண்டி இருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டி.ஆர் ஆகியவற்றின் மூன்று தவணைகளும் முடக்கப்பட்டன.

3 /5

2021 ஜூலை முதல் முடக்கத்தை நீக்குவதற்கான முடிவு சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். ஆனால் ஜூலை 1 முதல் டிஏவில் ஏற்படும் எந்த ஒரு அதிகரிப்பும் அந்த நாளிலிருந்து மட்டுமே நன்மை பயக்கும். அதாவது முடக்கப்பட்ட முந்தைய காலத்திற்கான டிஏ-வின் நிலுவைத் தொகை கிடைக்காது.

4 /5

மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 17 சதவீத டி.ஏ-வைப் பெறுகின்றனர். டி.ஏ.வின் இந்த நிலை 2019 ஜூலை முதல் நடைமுறைக்கு வந்தது. ஜனவரி 2020 முதல் மேலதிக திருத்தங்கள் ஏற்பட்டன. ஆனால், கோவிட் -19 காரணமாக இதர இரண்டு திருத்தங்களும் இடைநிறுத்தப்பட்டன.

5 /5

கடந்த ஆண்டு, மத்திய அமைச்சரவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான டிஏவை 4 சதவீதம், 21 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளித்தது. இது ஜனவரி 1, 2020 முதல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், தொற்றுநோயை அடுத்து, அதிகரித்த விகிதத்தில் DA வழங்கலும், ஓய்வூதியம் பெறுவோருக்கான DR-உடன்  நிறுத்தப்பட்டது.