பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், ரெயில் தண்டவாளம் அருகே தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதியதில் 60 பேர் பலியானார்கள்
ஆளில்லா ரயில்வே கிராசிங்கிற்கு வெகு அருகே தசரா கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது
கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த திட்டமும் விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் இல்லாததும், ரயில்வே கிராசிங்கை ஒட்டி தடுப்புகளோ வேலியோ அமைக்கப்படாததும் விபத்துக்கு காரணம்
ராவண வதத்தின்போது பட்டாசு வெடிக்கப்பட்டதால், காயம் ஏற்மடாமல் தப்புவதற்காக பலர் தண்டவாளத்தில் நின்றுள்ளனர்.
ரயில் வேகத்தை குறைக்காமல் சென்றதால் உயிரிழப்பு அதிகளவில் ஏற்பட்டதாகவும், அங்கு வழக்கமாக நடைபெறும் திருவிழா என்பதை ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கத் தவறிவிட்டதும் விபத்துக்கான முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன.
ரயில் வரும் போது ஒலி எழுப்பவில்லை என்றும், ஓசை எழுப்பியிருந்தால் பலர் உயிர் பிழைத்திருக்க கூடும் எனவும் காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்