BE, BTech ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கு மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது!

Last Updated : May 25, 2018, 01:51 PM IST
BE, BTech ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு! title=

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கு மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது!

பொறியியல் கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கு வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், கால அவகாசம் வரும் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்டர்லைட் ஆலை போராட்டத்திற்கு பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால் இந்த கால அவகாசம் நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது.

சமீப காலமாக பொறியியல் படிப்பிற்கான ஆர்வம் தமிழக மாணவர்களிடம் குறைந்து வருகிறது என பேசப்பட்ட வந்த நிலையில் தற்போது மாணவர்களிடம் மீண்டும் பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதாக தெரிகிறது.

தமிழகத்தில் பொறியியல் பயில விரும்பும் மாணவர்களுக்கான ஆன்லைன் சேர்க்கை கடந்த மே 3-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வரகிறது. 

முன்னதாக, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேர பதிவை தொடங்கிவிட்டனர். CBSE 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளிவராததால் அவர்கள் இன்னும் பதிவை நிறைவு செய்யவில்லை.

இந்நிலையில் தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவுசெய்ய மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த காலக்கட்டத்தினில் மேலும் பல்லாயிரம் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, மாணவர்களின் விண்ணப்ப கட்டணத்தை DD-யாக ஏற்க வசதிகள் செய்யப் பட்டுள்ளதாகவும், மாவட்டம்தோறும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News