தன் கேமிராக்களால் தனிப் பெருமையுடன் வெளிவரும் OnePlus நிறுவனத்தின் OnePlus 6 மொபைல் ஆனது வரும் மே 16-ஆம் நாள் இந்தியாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
OnePlus நிறுவனத்தின் முந்தைய OnePlus 5T -வை காட்டிலும் இந்த OnePlus 6 ஆனது சற்று கூடுதல் விலையுடன் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் உறுதியான விலை குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
OnePlus 6 ஆனது மூன்று வகைகளாக வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன்படி
- 64 GB நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 ஆனது ரூ.33,999 - ரூ.36,999 ஆக இருக்க வாய்ப்புள்ளது
- 128 GB நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 ஆனது ரூ.38,999 - ரூ.42,999 ஆக இருக்க வாய்ப்புள்ளது
- 256 GB நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 Premium ஆனது ரூ.44,999 - ரூ.48,999 ஆக இருக்க வாய்ப்புள்ளது
இந்த விலை மதிப்பானது UK-ல் விற்கப்படும் OnePlus 6 மொபைலின் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னதாக OnePlus 5T வெளியாகும் போது UK விலையுடன் ஒப்பிட்டு கணக்கிடப்பட்ட இந்திய விலையானது சுமார் 10% வேறுபாட்டுன் காணப்பட்டது.
அதேப்போல் தற்போது இந்த விலையில் மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus 6 சிறப்பம்சங்கள்...
- Dual Sim, VoLTE, 4G, 3G, Wi-Fi, NFC
- Octa Core, 2.45 GHz Processor
- 6 GB RAM, 64 GB inbuilt
- 3300 mAh Battery
- 6.01 inches, 1080 x 2160 px display
- 16 MP Dual Rear + 16 MP Front Camera
- Android, v7.1.1