ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் லக்கி டிரா போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அரபு அமீரகத்தில் வாழும் இந்தியரான மனோஜ் என்பவர் சமீபத்தில் நடைபெற்ற லக்கி ட்ரா போட்டிகளில் இரண்டு முறை வென்றுள்ளார். தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து சளைக்காமல் போட்டியில் பங்கேற்ற அவர், 77,777 திர்ஹம்களை வென்றுள்ளார். இது இந்திய ரூபாயில் சுமார் 17 லட்சமாகும். ராபிள் போட்டியில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ள அவர், பல காலங்களாக பரிசு கிடைக்கவில்லை என்றாலும் மனம் சளைக்காமல் டிக்கெட்களை தொடர்ந்து வாங்கி வந்துள்ளார்.
லக்கி டிரா போட்டியில், மனோஜ் வென்றது குறித்து அவரது நண்பர் கூறியபோது அளவில்லாத மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
லக்கி ட்ராவில் பரிசாக வென்ற பணத்தை என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, இதை வைத்துக் கொண்டு எனது தாய்நாட்டில் உள்ள உறவினர்களுக்கு, தேவை உள்ள மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் உதவுவேன் என குறிப்பிட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் முக்கியமான நாடாக விளங்குவது துபாயில் சென்ற வாரம் நடந்த நடந்த லாட்டரி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அனிஷ் என்பவர் அனிஷ் என்பவர் 10 மில்லியன் திர்ஹம் வென்றுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் கூறுவதென்றால், சுமார் 21 கோடியாகும்.
மேலும் படிக்க | துபாயில் ராபிள் குலுக்கல் போட்டியில் ரூ.7.5 கோடி வென்ற இந்தியர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக அளவில் இந்தியர் வசிப்பது தெரிந்ததே. அதிலும் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்நாட்டின் முக்கிய வர்த்தக துறைகளான கட்டுமானம், சுற்றுலா, ஹோட்டல் மற்றும் ரியல் ஸ்டேட் ஆகிய துறைகளில், பெரிய பதவிகளிலும், தொழிலாளர் நிலைகளிலும் அதிக அளவில் இந்தியர்கள் பணிபுரிகின்றனர்.
துபாயில், லாட்டரி மற்றும் குலுக்கல் போட்டிகள் வழக்கமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அபுதாபி வாழ் தமிழர்களே அலர்ட்: இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR