வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐக்கள்) குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர்ந்தோரில் மிகப் பெரிய பங்கைக் கொண்ட கேரளாவைச் சேர்ந்தவர்கள், அக்டோபர் 3 முதல் அமலுக்கு வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) குடியேற்றக் கொள்கையால் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வளைகுடா நாடுகளுக்கு செல்லும் வெளிநாட்டினர், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விசா விதிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மல்டிபிள்-என்ட்ரி விசிட் விசா என்பது இந்தியாவிலோ அல்லது பிற நாடுகளிலோ தங்கள் படிப்பைத் தொடரும் என்ஆர்ஐ மாணவர்களுக்கு அனுகூலமாக இருக்கிறது. இது தவிர, புதிய குடியேற்றம், வெளிநாட்டினர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை நீண்ட காலம் தங்குவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து வர அனுமதிக்கிறது என்று அபுதாபியை தளமாகக் கொண்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேம்பட்ட விசா அமைப்பில் 10 ஆண்டு விரிவாக்கப்பட்ட கோல்டன் விசா திட்டம், ஐந்தாண்டு பசுமை வதிவிட வசதி (கிரீன் ரெசினடன்சி) மற்றும் வேலை தேடுபவர்களுக்கான புதிய நுழைவு அனுமதி (எண்ட்ரி பர்மிட்) ஆகியவை அடங்கும். மல்டி-என்ட்ரி டூரிஸ்ட் விசா பார்வையாளர்களை 90 நாட்கள் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க அனுமதிக்கும். மேலும், ஐந்தாண்டு கிரீன் விசா திறமையான தொழிலாளர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு சாதகமானது.
பட்டம் பெற்றவர்களுக்கான வேலை ஆய்வு விசாவிற்கு ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை. மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின்படி முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது திறன் மட்டத்தில் வகைப்படுத்தப்பட்டவர்களுக்கும், உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் புதிதாகப் பட்டம் பெற்றவர்களுக்கும் இது வழங்கப்படும். பெற்றோர்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு 18 வயது முதல் 25 வயது வரை நிதியுதவி செய்யலாம், பள்ளி மற்றும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அமீரகத்தில் இருக்க அனுமதிக்கலாம்.
மேலும் படிக்க | கனடா விசா தாமதமாகிறதா... உங்களுக்கான முக்கிய தகவல் இதோ!
கோல்டன் விசாவில் திருத்தம் செய்யப்பட்டதன் மூலம் மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் அதிக நிபுணர்கள் மாதம் ஒன்றுக்கு AED 30,000 (தோராயமாக ₹6.7 லட்சம்) சம்பளத்தில் 10 வருட விசாவைப் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. கூடுதலாக, இந்த விசா வைத்திருப்பவர்கள் பல வீட்டுத் தொழிலாளர்களுக்கும் ஸ்பான்சர் செய்யலாம். மற்றும் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெளியே தங்கியிருக்கும் நாட்களைப் பொருட்படுத்தாமல் அவர்களின் விசா செல்லுபடியாகும்.
புதிய முறையின் கீழ், வெளிநாட்டவர்கள் தங்களுடைய வதிவிட விசா காலாவதியானவுடன் ஆறு மாதங்கள் வரை நெகிழ்வான சலுகைக் காலத்தைப் பெறுவார்கள். தற்போதுள்ள சலுகை காலம் 30 நாட்கள் ஆகும்.
பல நுழைவு மற்றும் வேலை ஆய்வு விசாக்கள் முதலீட்டாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய ஊக்குவிக்கும் என துபாய் வெளிநாட்டு ஊழியர் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
"வேலை ஆய்வு விசா, பணிதிட்டங்களை விரைவாக முடிக்க நிபுணர்களின் உதவியை சரியான நேரத்தில் பெற நிறுவனங்களுக்கு உதவும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க | NRI NEWS: கனடாவில் வேலை தேடுகிறீர்களா.. உங்களுக்கான Good News இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ