துபாய்: உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், அது அடுத்த உச்சத்தைத் தொடும் முன், மத்திய வங்கிகளைப் போலவே, நிறுவனங்களும் பாதிப்பைக் குறைக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்கின்றன.
ஒரு கணக்கெடுப்பின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 74 சதவீத நிறுவனங்கள் தொற்றுநோய்க்குப் பிந்தைய தொழிலாளர் சந்தையின் அழுத்தத்தை உணர்கிறது. அங்கு முன்னர் அளிக்கப்பட்ட ஊதிய தொகுப்புகள் தற்போதைய திறமை வாய்ந்த பணியாளர்களை ஈர்க்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
"தற்போதைய சூழலில் எதிர்கொள்ளும் சவால்களை சிறப்பாக எதிர்கொள்வதற்கும், புதிய திறமைகளை ஈர்க்கவும், அவர்களின் தற்போதைய பணியாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் பணியாளர்களின் சம்பளத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது" என்று ஹ்யுமன் கேபிட்டல் சல்யூஷன்சின் மத்திய கிழக்கு தலைவர் ராபர்ட் ரிக்டர் கூறினார்.
மேலும் படிக்க | இந்தியாவிலிருந்து அமீரகம் செல்லும் கோதுமைக்கு தடை: இதுதான் காரணம்
வருடாந்திர ஊதிய மறுஆய்வு செய்த நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதி நிறுவனங்கள் (49 சதவீதம்) அதிக சம்பளத்திற்கான பட்ஜெட் போடுவதாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
பதினான்கு சதவீத நிறுவனங்கள் மிட்-இயர் ஊதிய மதிப்பாய்வுகளைத் திட்டமிடுகின்றன என கணக்கெடுப்பு மேலும் கூறியது. இவற்றில் 21 சதவீத நிறுவனங்கள் 5-8 சதவீத உயர்வை எதிர்பார்க்கின்றன. அதே சமயம் 24 சதவீத நிறுவனங்கள் 9 சதவீதத்துக்கும் அதிகமான உயர்வுக்கான பட்ஜெட்டை தயார் செய்கின்றன. பெரும்பான்மையான நிறுவனங்கள் (42 சதவீதம்) 2022ல் 5-6 சதவீத உயர்வை எதிர்பார்க்கின்றன. 2023ல், 35 சதவீத நிறுவனங்கள் ஊதியத்தில் 2-4 சதவீத உயர்வை எதிர்பார்க்கின்றன.
சராசரியாக, உயர் தலைமைத்துவத்துடன் ஒப்பிடும்போது ஜூனியர் மற்றும் மிடில் மேனேஜ்மென்ட் அதிக சம்பள உயர்வு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என அறிக்கை கூறுகிறது.
சம்பள மதிப்பாய்வை நடத்துவதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் பணியாளர்களுக்கு இடையிலான திறன் போட்டி (35 சதவீதம்) மற்றும் பணியாளர்களை தக்கவைத்துக்கொள்வது (27 சதவீதம்) என்று நிறுவனங்கள் கூறுகின்றன. சந்தை விகிதத்தை விட குறைவாக சம்பளம் இருப்பதால் சம்பள உயர்வு அவசியம் என்று பதினைந்து சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதே சமயம் 23 சதவீத நிறுவனங்கள் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு உயர்வு இருப்பது முக்கியம் என்று கூறியுள்ளனர்.
இந்த தரவுகள், முதலாளிகள் தங்கள் வணிகத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் சிறந்த முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான தெளிவையும், நம்பிக்கையையும், ஆலோசனைகளையும், தீர்வுகளையும் பெறவும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் படிக்க | சிங்கப்பூரில் பணிபுரிபவர்களுக்கு முக்கிய செய்தி: தீவிரமாகும் பணியிட பாதுகாப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR