இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை; ரணில் நடத்திய முக்கிய ஆலோசனை

அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகை அரசியல் அமைப்பில் திருத்தம் தேவை என பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 19, 2022, 05:51 PM IST
இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை; ரணில் நடத்திய முக்கிய ஆலோசனை title=

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. இதில் ஆட்சிக்கு ஆதரவாளர்களுக்கும் எதிர்பாளர்களுக்கும் இடையே மூண்ட வன்முறையில், இலங்கை பற்றி எரிந்தது. அதில் அந்நாட்டின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிபராக அவரது சகோதரர்  கோட்டாபய ராஜபக்ச தொடருகிறார்.

பின்னர் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றத்தில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நெருக்கடியைத் தவிர்க்க அரசு முயற்சி செய்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டை நீக்க  20 மில்லியன் அமெரிக்க டாலர்களை தேவை, ஒருநாளுக்கு மட்டும்தான் பெட்ரோல் இருப்பு இருக்கிறது என கூறினார்.

மேலும் படிக்க | WISE: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் மலிவான வழிமுறை
 
இந்நிலையில், இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகை அரசியல் அமைப்பில் திருத்தம் தேவை என பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், 21 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று சட்டத்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில், அரசிய சாஸன திருத்தம் தொடர்பான சட்ட வரைவு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த சட்டவரைவின்படி, அதிபரின் அதிகாரங்களை வெகுவாகக் குறைத்து நாடாளுமன்றத்தை மேலும் பலப்படுத்தும் வகையிலான அம்சங்களை இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News