இலங்கையில் கடும் பஞ்சம்: கை குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு கடல் வழியாக தமிழகத்திற்குள்  அகதிகளாக  வந்த வண்ணம் உள்ளனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 5, 2022, 01:05 PM IST
  • இலங்கையில் தொடரும் கடும் உணவுப் பஞ்சம்.
  • மூன்று மாத கை குழந்தையுடன் வந்த இலங்கை தமிழர்கள்.
  • தனுஷ்கோடியில் தஞ்சம்.
இலங்கையில் கடும் பஞ்சம்: கை குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் title=

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்  மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த  மேலும் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு கடல் வழியாக தமிழகத்திற்குள்  அகதிகளாக  வந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு யாழ்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி, அவுஸ்யா, அவரது முன்று மாத குழந்தை, மன்னார்  மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி யோகேஸ்வரி அவரது இரு மகள்கள் மற்றும்  முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த புஷ்பம் மற்றும் அவரது மகன் பிரபாகரன் மற்றும் உட்பட  மூன்று குடும்பத்தை சேர்ந்த 10 பேர் நேற்று இரவு மன்னாரில் இருந்து ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை 1 மணியவில்  அடுத்த நடுதிட்டு பகுதியில்  வந்தனர்.

பின்னர் தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கைத் தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க | மீண்டும் இலங்கையில் நெருக்கடி; வீதிகளில் திரளும் மக்கள்; ஒடுக்க நினைக்கும் அரசு! 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்தள்ளது. அதே போல் டீசல் மற்றம் பெட்ரோல் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. விலைவாசி ஒரு பக்கம் உயர்ந்தாலும், அத்தியாவசிய  பொருட்களின் தட்டுபாடு அதிகரித்துள்ளதால் இலங்கையில் குழந்தைகளை வைத்து வாழ முடியாது சூழல் ஏற்பட்டுள்ளதால் மூன்று மாத கை குழந்தையுடன்பலத்த மழை மற்றும் சூறைகாற்றுக்கு மத்தியில்  பைப்பர் படகில் உயிரை பணயம் வைத்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்தாக இலங்கை தமிழர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 10 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News