இலங்கையில் அவசர நிலை பிரகடனம், அதிபர் முக்கிய அறிவிப்பு

சுமார் 22 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தீவு நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 2, 2022, 11:19 AM IST
  • இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்
  • இலங்கையில் நிலைமை மோசமாகிவிட்டது
இலங்கையில் அவசர நிலை பிரகடனம், அதிபர் முக்கிய அறிவிப்பு title=

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. இத்னால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு 5 ஆயிரம் பேர் திரண்டனர். அவர் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் முழங்கி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இலங்கை யாழ்ப்பாணம் மாபெரும் கண்டன பேரணியில் மோதல்.. உயிர் தப்பித்த போலீசார்

இது தவிர இலங்கையின் மேல் மாகாணத்தில் 6 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 2 நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை அமுலில் இருக்கும். முன்னதாக, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் இல்லத்துக்கு வெளியே மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது, ​​ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

श्रीलंका में बेहद खराब हुए हालात, प्रदर्शनों को देखते हुए राष्ट्रपति ने लगाई इमरजेंसी

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அவசர நிலை கொண்டு வரப்பட்டுள்ளது. 

இலங்கையின் பொருளாதாரமென்பது கிட்டத்தட்ட 80% பிற நாடுகளைச் சார்ந்தே இருப்பதால், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்துக்குக்கிடையில், இலங்கையின் பொருளாதாரமும் அதல பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்களும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News