NRI செய்திகள்: சில நாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்திய மக்களுக்கு, விசா எடுக்கத் தேவையில்லை. நம் நாடு பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் அல்லது ஆன்-அரைவல்-விசா (On-Arrival-visa) எனப்படும் வசதி மூலம். அவர் விசா இல்லாமலேயே அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில், இந்தியா மற்றும் ரஷ்யா இடையே விசா இல்லாமல் பயணம் செய்யும் வசதியை வழங்குவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சமர்கண்டில் நடைபெற்ற SCO உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது புடின் இந்த திட்டத்தை முன்வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலியுறுத்தும் நோக்கில் இது மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
உஸ்பெகிஸ்தானின் சில்க் ரோடு நகரத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) ஆண்டு உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே நடந்த இருதரப்பு சந்திப்பில், ரஷ்ய அதிபர், இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது ரஷ்ய மக்கள் மிகுந்த ஆர்வமும் மதிப்பும் கொண்டுள்ளனர் என்று வலியுறுத்தினார்.
ரஷ்ய அதிபர் புடின் "விசா இல்லாத சுற்றுலா பயணத்திற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நாங்கள் இதை முன்மொழிகிறோம்," என்று கூறினார்.
மேலும் படிக்க | NRI News: கனடாவில் குடியேற விரும்புவர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி!
பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே நடந்த உரையாடலின் போது, புது தில்லிக்கும் மாஸ்கோவிற்கும் இடையே பல தசாப்த கால உறவை பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மேலும், கடந்த பிப்ரவரியில் அண்டை நாட்டிற்கு எதிராக ரஷ்யப் படைகள் 'சிறப்பு ராணுவ நடவடிக்கையை' தொடங்கிய பிறகு, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மீட்க உதவிய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இந்தியாவில் ஏற்கனவே ரஷ்யர்களுக்கு இ-விசா அமைப்பு இருப்பதால், இந்திய நாட்டினருக்கும் ரஷ்ய தரப்பிலிருந்து இந்தியா இந்த வசதியை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறது என்று ராஜீய வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான இந்திய சுற்றுலாப் பயணிகள் மூலம் ரஷ்யா உடனான உறவு மேம்படுவதோடு, மக்களிடையேயான தொடர்பு மற்றும் உறவுகளை வலுப்படும் என்று ராஜீய வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் படிக்க | NRI Investment Options: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான டாப் முதலீட்டு திட்டங்கள்
மேலும் படிக்க | ஐரோப்பிய நாடுகளில் வேலை தேடுவோருக்கு GOOD News! 7 EU நாடுகளின் முக்கிய அறிவிப்புகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ