அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகிவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இது மக்களிடையே பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை இலங்கை பகுதியில் அதிகமாக இருப்பதால் மக்கள் பலரும் வீதிகளில் இறங்கிய போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று கேகாலை மாவட்டம் ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி - கொழும்பு ரயில் பாதையை போராட்டக்காரர்கள் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலையிலிருந்து சுமார் 15 மணி நேரம் வரை இந்த போராட்டம் நீடித்தது.
மேலும் படிக்க | ஒரே நாளில் ரூ.75 உயர்ந்த டீசல் விலை...நெருக்கடியில் இலங்கை..
போராட்டம் தொடர்ந்து நீடித்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க முடிவு செய்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், இதனால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீச தொடங்கினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் பவுசர் ஒன்றுக்கு தீ வைக்க முயற்சி செய்ததுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றுக்கும் தீ வைத்ததாக கூறப்படுகிறது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் போலீசார் துப்பாக்கியை எடுத்து சுட தொடங்கினர், இந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது, இதில் காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் அவருக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலானியின் தீவிரத்தை உணர்ந்து இந்த பகுதியில் ராணுவத்தினர், சிறப்பு அதிரடி படையினர் குவிக்கப்பட்டு இருக்கின்றனர், இருப்பினும் இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க | Srilanka Crisis: அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள பிரதமர் ராஜபக்ஷ பரிந்துரை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR