பிரிட்டனில் மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்தது மலையாளி கணவரா? போலீஸார் விசாரணை

Britain NRI Murder: பிரிட்டனில், மலையாளி செவிலியர் அஞ்சு மற்றும் அவரது 2 குழந்தைகள் படுகொலை! கணவரை விசாரித்து வரும் காவல்துறையினர்  

Last Updated : Dec 18, 2022, 06:47 AM IST
  • வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த என்.ஆர்.ஐ குடும்பம்
  • செவிலியர் அஞ்சு மற்றும் அவரது 2 குழந்தைகள் படுகொலை!
  • போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கணவர்
பிரிட்டனில் மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்தது மலையாளி கணவரா? போலீஸார் விசாரணை title=

லண்டன்: பிரிட்டனில் செவிலியராகபணிபுரிந்த பெண் மற்றும் அவருடைய குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கொலை என போலீசார் தெரிவித்துள்ளனர். கோட்டயம் வைக்கம் குலசேகரமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஞ்சு, அவரது கணவர் சஜுவால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சு, அவரது ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகள் என குடும்பத்துடன் பிரிட்டனின் கெட்டரிங் என்ற இடத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் செவிலியராகப் பணிபுரியும் அஞ்சு, அவரது குழந்தைகள் ஜான்வி, ஜீவா ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மரணங்களைத் தொடர்ந்து, அஞ்சுவின் கணவரும், கண்ணூர் பாடியூர் கொம்பன்பாறையைச் சேர்ந்தவருமான செளவலன் சஜு, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சுவின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்களால் முடியவில்லை, இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, தாயும் குழந்தைகளும் உயிரிழந்த துயர சம்பவம் தெரிய வந்தது.

மேலும் படிக்க | நடிகை ஐஸ்வர்யா ராயின் போலி பாஸ்போர்ட்! பழுவேட்டையர் நந்தினிக்கே ஆப்பு?

அஞ்சுவின் கணவர் சஜு வேலையில்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும், சிறிய விஷயங்களுக்கு கூட கோபப்படும் குணம் கொண்டவர் என்றும் அஞ்சுவின் தந்தை தெரிவித்தார். பல மாதங்களாக அஞ்சு வீட்டிற்கு பணம் அனுப்பவில்லை என்று கூறிய அஞ்சுவின் அப்பா,மகள் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்தாள் என்று தெரிவித்தார்.

மகளுடன் வீடியோ கால் செய்துபோதும் போது அவளது நிலைமையை பார்த்து வருத்தமாக இருந்தது என்று கூறிய அஞ்சுவின் அப்பா, மருமகன் வேலையில்லாமல் இருந்ததைத் தவிர, அவர்களுக்குள் வேறு பிரச்சனைகள் எதுவும் இருந்ததாக தெரியவில்லை என்று அஞ்சுவின் தந்தை கூறியுள்ளார்.

அஞ்சு மற்றும் அவரது குழந்தைகளின் கொலை செய்தியைக் கேட்டதில் இருந்து, அவர்களது குடும்பத்தினரால் இன்னும் வெளியே வரமுடியவில்லை. அஞ்சுவிற்கு போன் செய்தபோது அவர் அதனை எடுக்காததால், நண்பர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தனர்.

மேலும் படிக்க | கடனை அடைக்க தனது சிறுநீரகத்தை விற்க முயன்ற பெண் ரூ.16 லட்சத்தை இழந்த சோகம்!

நார்தம்ப்டன்ஷையரில் உள்ள கெட்டரிங் என்ற இடத்தில் வியாழக்கிழமை இரவு இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. வீடு உள்ளிருந்து பூட்டியிருப்பதைக் கண்ட நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது, அஞ்சு பிணமாக கிடந்த நிலையில். அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகள் உயிருடன் இருந்தனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்டனர். ஆனால், குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

அஞ்சுவின் கணவர் சஜு, ஹோட்டல் ஒன்றில் உணவு விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார். அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு இங்கிலாந்து வந்தனர். அசம்பவத்தை அடுத்து தப்பி ஓடிய சஜுவை போலீசார் விரட்டி சென்று கைது செய்தனர். ஞ்சுவின் கணவர் சஜுவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலைச்சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | Vijay Diwas 2022: 1971 போர் வெற்றியை கொண்டாடும் இந்தியா, தலைவர்கள் வாழ்த்து 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News