இந்த நாட்டு மக்கள் ஓமனுக்கு செல்ல விசா தேவை இல்லை: முழு பட்டியல் இதோ

Visa Free Entry: கடந்த ஆண்டு அக்டோபரில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (கல்ஃப் கோவாபரேஷன் கவுன்சில் - ஜிசிசி) நாடுகளில் வசிப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவை ஓமன் அறிவித்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2023, 06:30 PM IST
  • ஓமன் நாட்டுக்கு செல்லும் திட்டம் உள்ளதா?
  • அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
  • இந்த நாட்டு மக்களுக்கு விசா தேவையில்லை.
இந்த நாட்டு மக்கள் ஓமனுக்கு செல்ல விசா தேவை இல்லை: முழு பட்டியல் இதோ title=

ஓமன் நாட்டுக்கு செல்லும் திட்டம் உள்ளதா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓமன் 100 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்களுக்கான காலத்துக்கு விசா இல்லாமல் ஓமன் நாட்டுக்குள் நுழைய (விசா-ஃப்ரீ) வாய்ப்பளிக்கிறது. நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, ஓமன் நாட்டிற்குச் செல்லும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (கல்ஃப் கோவாரேஷன் கவுன்சில் - ஜிசிசி) நாடுகளில் வசிப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவை அந்நாடு அறிவித்தது. ஜிசிசி நாடுகளில் வசிப்பவர்களின் விசா மூன்று மாதங்களுக்குக் குறையாத காலத்திற்கு செல்லுபடியாகும். ஓமன் விமான நிலையத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை, குறிப்பிட்ட நாட்டினருக்கு விசா வழங்குவது தேவையான கொள்கைகளைப் பின்பற்றிய பின்னரே பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ராயல் ஓமன் போலீஸ் (ஆர்ஓபி) இந்த புதிய கொள்கைக்கு தகுதியான நாட்டினர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஓமன் வெளியிட்டுள்ள முழு பட்டியல் இதோ:

அல்பேனியா
அல்ஜீரியா
அன்டோரா
அர்ஜென்டினா
ஆர்மீனியா
ஆஸ்திரேலியா
ஆஸ்திரியா
அஜர்பைஜான்
பெலாரஸ்
பெல்ஜியம்
பூட்டான்
பொலிவியா

மேலும் படிக்க | DTAA for NRI: வெளிநாட்டில் வசிக்கும் என்ஆர்ஐ -கள் இரட்டை வரியைத் தவிர்க்க டிடிஏஏவைப் பெறுவது எப்படி?

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
பிரேசில்
புருனே
பல்கேரியா
கனடா
சிலி
சீனா
கொலம்பியா
கோஸ்ட்டா ரிக்கா
குரோஷியா
கியூபா
சைப்ரஸ்
செ குடியரசு
டென்மார்க்
ஈக்வடார்
எகிப்து
எல் சல்வடோர்
பின்லாந்து
பிரான்ஸ்
ஜார்ஜியா
ஜெர்மனி
கிரீஸ்
குவாத்தமாலா
ஹோண்டுராஸ்
ஹாங்காங்
ஹங்கேரி
ஐஸ்லாந்து
இந்தியா
இந்தோனேசியா
ஈரான்
அயர்லாந்து
இத்தாலி
ஜப்பான்
ஜோர்டான்
கஜகஸ்தான்
கிர்கிஸ்தான்
லாவோஸ்
லெபனான்
லிச்சென்ஸ்டீன்
லக்சம்பர்க்
மக்காவ்
வடக்கு மாசிடோனியா
மலேசியா
மாலத்தீவுகள்
மால்டா
மொரிட்டானியா
மெக்சிகோ
மால்டோவா
மொனாக்கோ
மொராக்கோ
நெதர்லாந்து
நியூசிலாந்து
நிகரகுவா
நார்வே
பனாமா
பராகுவே
பெரு
போலந்து
போர்ச்சுகல்
ரஷ்யா 
ருமேனியா
சான் மரினோ
செர்பியா
சீஷெல்ஸ்
சிங்கப்பூர்
ஸ்லோவாக்கியா
ஸ்லோவேனியா
தென்னாப்பிரிக்கா
தென் கொரியா
ஸ்பெயின்
சுரினாம்
சுவிட்சர்லாந்து
ஸ்வீடன்
தைவான்
தஜிகிஸ்தான்
தாய்லாந்து
துனிசியா
துருக்கி
துர்க்மெனிஸ்தான்
உக்ரைன்
ஐக்கிய இராச்சியம்
அமெரிக்கா
உருகுவே
உஸ்பெகிஸ்தான்
வாடிகன் நகரம்
வெனிசுலா
வியட்நாம்

மேலும் படிக்க | அபுதாபியில் புதிய விசா ஸ்க்ரீனிங் மையம் திறக்கப்பட்டது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News