வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 182 நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ-கள்), அவர்கள் ஏற்கனவே இந்தியாவில் வரி செலுத்தியிருந்தால், அவர்கள் வசிக்கும் நாட்டில் வரி விலக்குக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவார்கள். இரட்டை வரி விதிப்பைத் தவிர்க்க, இந்தியா பல நாடுகளுடன் DTAA , அதாவது இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களை (Double Taxation Avoidance Agreements) செய்து கொண்டுள்ளது.
அதாவது, என்ஆர்ஐ-கள் இரண்டு முறை வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக மற்ற நாட்டில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது இந்தியாவில் செலுத்தப்பட்ட வரிக்கு விலக்கு கோரலாம். DTAA எப்படி இரட்டை வரிவிதிப்பைத் தடுக்கிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உதாரணமாக, இங்கிலாந்தில் தங்கியிருக்கும் ஒரு நபருக்கு இந்தியாவில் ரூ. 50,000 வட்டி வருமானம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். வெவ்வேறு வரி விதிகளின் காரணமாக, இந்தியாவில் வரி விகிதம் 10 சதவீதமாகவும், இங்கிலாந்தில் 15 சதவீதமாகவும் உள்ளது என்று வைத்துக் கொண்டால், இரு நாடுகளுக்கு இடையில் உள்ள வரி ஒப்பந்தத்தின் காரணமாக, அவர் இந்தியாவில் செலுத்திய வரிக்கு இங்கிலாந்து வரிச் சலுகை அளிக்கும்.
இந்த உதாரணத்தில் அவரது வரி பின்வருமாறு கணக்கிடப்படும்:
- வட்டி வருமானம்: ரூ. 50,000
- இந்தியாவில் செலுத்தப்படும் வரி: ரூ. 5,000
- இங்கிலாந்தில் செலுத்த வேண்டிய வரி: ரூ. 7,500
- இந்தியாவில் செலுத்தப்படும் வரிக்கான கடன் (இந்த தொகை கழிக்கப்படும்): ரூ5,000
- இங்கிலாந்தில் அவர் கட்ட வேண்டும் மொத்த வரி: ரூ. 2,500
மேலும் படிக்க | NRI வீட்டில் வாடகைக்கு உள்ளீர்களா? இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்
இருப்பினும், ஒரு என்ஆர்ஐ வரி வதிவிடச் சான்றிதழ் (TRC) மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு DTAA இன் பலன்களைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒரு என்ஆர்ஐ பெறும் வட்டி வருமானத்தின் மீது 20 சதவிகிதம் (அத்துடன் கூடுதல் கட்டணம் & செஸ்) வரி விதிக்கப்பட்டாலும், அவர் வசிக்கும் நாட்டுடன் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால் அது குறைந்த விகிதத்தில் வசூலிக்கப்படும்.
இருப்பினும், குறைந்த விகிதத்தில் வரி செலுத்தத் தகுதி பெற, வரி செலுத்துவோர் வரி வதிவிடச் சான்றிதழ், படிவம் 10F மற்றும் PAN (நிரந்தர கணக்கு எண்) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
படிவம் 10F என்பது ஒரு மதிப்பீட்டாளரின் சுய-அறிவிப்பு (செல்ஃப் டிக்லரேஷ்ன) ஆகும். இந்தியா DTAA ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நாட்டில் தான் அந்த ஆண்டில் 182 நாட்களுக்கு மேல் வசித்ததாகவும், இதனால் தான் குறைந்த வரிவிகிதத்திற்கு தகுதியானவர் என்றும் இதன் மூலம் ஒரு என்ஆர்ஐ அறிவிக்கிறார்.
மேலும், வரி செலுத்துவோர் வசிக்கும் நாட்டில் தனது வரிப் பொறுப்பைத் தீர்க்கும் போது இந்தியாவில் செலுத்தப்பட்ட வரிகளுக்கான வரிக் கிரெடிட்டை அவர் பெறலாம்.
ஒரு என்ஆர்ஐ இந்தியாவில் கிடைக்கும் வருமானத்திற்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டும். எனினும், அவர் வசிக்கும் நாட்டிற்கு இந்தியாவிற்கும் இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் இருந்தால் அவர் விலக்கு பெறலாம் மற்றும் குறைந்த வரி விகிதத்திற்கு தகுதியுடையவராகலாம். வரி செலுத்துவோர் ஒரே வருமானத்தில் இரண்டு முறை வருமான வரி செலுத்துவதைத் தடுப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ