பெல்ஜியம் குடிமகனான பிறகும் இந்திய பாஸ்போர்டை பயன்படுத்திய நபர் இந்தியா வர தடை!

இந்தியக் கடவுச்சீட்டு (Indian Passport), இந்தியக் குடியுரிமை பெற்ற எவருக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணையின் அடிப்படையில் வழங்கப்படும் கடவுச் சீட்டு ஆகும். வெளிநாடு பயணம் செய்ய பாஸ்போர்ட் என்னும் கடவுச் சீட்டு அவசியம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 19, 2023, 01:12 PM IST
  • இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்த மத்திய அரசின் முடிவை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்த விக்ரம் ஷா.
  • ஷா மே 2015 இல் பெல்ஜிய குடியுரிமையைப் பெற்றார்.
பெல்ஜியம் குடிமகனான பிறகும் இந்திய பாஸ்போர்டை பயன்படுத்திய நபர் இந்தியா வர தடை! title=

இந்தியக் கடவுச்சீட்டு (Indian Passport), இந்தியக் குடியுரிமை பெற்ற எவருக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணையின் அடிப்படையில் வழங்கப்படும் கடவுச் சீட்டு ஆகும். வெளிநாடு பயணம் செய்ய பாஸ்போர்ட் என்னும் கடவுச் சீட்டு அவசியம். வேலை, சுற்றுலா என எதுவாக இருந்தாலும் வெளிநாடு பயணங்களுக்கு இந்திய பாஸ்போர்ட் தேவை. இந்தியக் குடியுரிமையை நிலைநாட்டவும் இது உதவும். அதே சமயத்தில், ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு சென்று அங்கு குடியுரிமை பெற்றவர்கள், தங்கள் பாஸ்போர்டை ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்யாமல் இருப்பது தண்டைக்குரிய குற்றமாகும். 

இந்நிலையில், பெல்ஜியக் குடியுரிமையைப் பெற்று, இந்தியக் கடவுச்சீட்டு, அதாவது பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிற நாடுகளுக்குப் பயணம் செய்த ஒருவர், இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்த மத்திய அரசின் முடிவை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் கெளதம் படேல் மற்றும் நீலா கோகாய் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மார்ச் 14 அன்று அளித்த உத்தரவில், மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்த விக்ரம் ஷா என்பவருக்கு நிவாரணம் வழங்க மறுத்தது.

தான் ஒரு அப்பாவித் தவறு செய்துவிட்டதாக ஷாவின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ஷா தனது மனுவில், இந்தியாவுக்குச் செல்வதற்கான விசா அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்தியக் குடியுரிமை (OCI) அட்டையை வழங்குமாறு மத்திய அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கோரினார்.

மேலும் படிக்க | வீட்டில் இருந்த படியே நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணபிப்பது எப்படி?

“பெல்ஜியக் குடியுரிமையைப் பெற்ற பிறகும், அவர் (ஷா) தனது இந்தியக் கடவுச்சீட்டில் ( Indian Passport) பயணம் செய்திருந்தால், அது வேண்டுமென்றே, தெரிந்து கொண்டே செய்த செயலாகத்தான் இருக்க வேண்டும், அது தவறு அல்லது கவனக்குறைவாக இருக்க முடியாது. இது ஒரு தெளிவான சட்ட மீறல்” என்று நீதிமன்றம் கூறியது.

“மனுதாரர் இந்தியக் குடிமகன் அல்ல என்பதாலும், அடிப்படை உரிமைகள் இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதாலும் எந்த அடிப்படை உரிமைகளும் மீறப்படும் என்ற கேள்விக்கு இடமில்லை” என்று நீதிமன்ர பிரிவு கூறியது.

குடியுரிமைச் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் விதிகளை ஷா மீறியதாக மத்திய உள்துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது, ஷா தனது இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி பல சந்தர்ப்பங்களில் மற்ற நாடுகளுக்குச் செல்வதற்கான விசாக்களை வாங்கினார். ஷா மே 2015 இல் பெல்ஜிய குடியுரிமையைப் பெற்றார். ஆனால் செப்டம்பர் 2020 வரை அவரது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 5 நாள்களில் பாஸ்போர்ட் வெரிபிகேஷன்... எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News