சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து அந்த நாடுகள் இடையே ஒரு இணக்கமான சூழல் உருவாகியது.
அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவை மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்தது. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முன்வந்தது.
இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழுவினர் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சு நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையையொட்டி அவர்களுக்கு கிம் ஜாங் அன் விருந்து அளித்து சிறப்பித்தார் அவர்களுடன் மனம் திறந்து பேசினார்.
இதையடுத்து, வடகொரியா அதிபரும் தென்கொரிய அதிபரும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சந்தித்தனர்.
இதனால் 60 ஆண்டாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக கடந்த 2015ல் வடகொரியா தென்கொரியாவிற்கு எதிராக களமிறங்கியது. அவர்களிடம் இருந்து தென் கொரியா பின்பற்றும் நேரத்தை விட 30 நிமிடம் குறைவான நேரத்தை பயன்படுத்தியது.
தென்கொரியாவில் மணி 9 என்றால், வடகொரியாவில் நேரம் 8:30ஆக இருக்கும்.
இந்நிலையில், இரு நாட்டு அதிபர்களும் இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தித்த அறையில் இரண்டு கடிகாரம் இருந்துள்ளது.
இந்த இரண்டில் ஒன்றில் வடகொரியா நேரமும், மற்றொன்றில் தென்கொரிய நேரமும் இருந்துள்ளது. இதை பார்த்து இரண்டு தலைவர்களும் வருந்தியுள்ளனர்.
இதையடுத்து, கிம் ஜாங் வடகொரியா நேரத்தை மீண்டும் அரை மணி நேரம் அதிகமாக்க போவதாக அறிவித்தார்.
அதோடு நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, அரை மணிநேரம் அதிகமாகி உள்ளது.
எல்லா மக்களும் அரை மணி நேரத்தை அதிகப்படுத்தி, மீண்டும் தென்கொரியாவோடு ஒன்றிணைந்தனர்.